திரிணாமுல் காங்., MP-க்கள் இருவர் இன்று பதவியேற்பு!
நடிகையும் திரிணாமுல் காங்., எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி இன்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்!
நடிகையும் திரிணாமுல் காங்., எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி இன்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்!
17-வது மக்களவையின் முதல் நாள் கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்ட நிலையில், முதல் நாள் கூட்டத்தை தவறவிட்ட நடிகையும் திரிணாமுல் காங்., எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி இன்று மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.
பிரபல நடிகையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான நுஸ்ரத் ஜஹான் மற்றும் தொழிலதிபர் நிகில் ஜெயினுக்கும் சமீபத்தில் திருமணம் நடைப்பெற்றது.
29-வயதான பெங்காலி நடிகை நுஸ்ரத் ஜஹான். இவர் நடந்து முடிந்த 17-வது மக்களவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாசர்ஹாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு மூன்று லட்சத்துக்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனையடுத்து இவர் தனது காதலரான தொழிலதிபர் நிகில் ஜெயினை கடந்த ஜூன் 19-ஆம் நாள் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் துருக்கி நாட்டில் உள்ள போட்ரம் நகரில் நடைபெற்றது. திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு துருக்கி மற்றும் இந்திய ஸ்பெஷல் உணவுகள் பரிமாறப்பட்டன. இந்த திருமணத்தில் பெங்காலி நடிகையும் ஜாதவ்பூர் எம்பியுமான மிமி சக்கரவர்த்தி பங்கேற்றார்.
இதன் காரணமாக இவர்கள் இருவராலும் மக்களவை கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. இந்நிலையில் இன்று இருவரும் மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டனர்.