காங்கிரஸின் ஒரு நாள் பாரத் பந்த் வெற்றிகரமாக முடிவமடைந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலட் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் இந்த நடைமுறையினை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் நடைப்பெற்றது


இப்போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் அசோக் கெலட் செய்தியாளர்களிடன் தெரிவித்துள்ளதாவது...



"இந்தியா முழுவதும் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் பாரத் பந்த் நடத்தியது கிடையாது, ஏனெனில் அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இருந்ததில்லை, ஆனால் அது பாஜக ஆட்சியமைப்பதற்கு முன்பு வரை.


இந்த முழு அடைப்பு போராட்டத்தில் மக்கள் விரும்பியே கலந்துக்கொண்டார்கள், போராட்டத்தில் கலந்துக்கொண்டதன் மூலம் அரசுக்கு நல்ல பாடத்தை கற்பித்துள்ளார்கள். 


இனியாவது பெட்ரோல், டீசல் விலையினை அரசு குறைக்க வேண்டும், அரசின் நிலைபாட்டை மாற்றிக்கொண்டாக வேண்டும். ஆனால் அவர்கள் இதுகுறித்து எல்லாம் கவலைப்பட மாட்டார்கள். நாம் அனைவரும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும், அது இப்போது மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்!