இன்று பிரதமர் மோடியின் பிறந்தநாள்: அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிவோம்
ஒரு தேசிய தலைவராக அனைவருக்கும் மோடியை தெரியும். அவரின் குழந்தைப் பருவத்தின் கதையையும் தெரிந்துக்கொள்ளுவோம்.
இன்று ஜனநாயக நாட்டில் 2வது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடியை அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரின் குழந்தைப் பருவத்தின் கதையை தெரிந்தவர்கள் சிலர் தான். வாருங்கள் இன்று அவரின் 69வது பிறந்த நாள். அவரின் குழந்தைப் பருவத்தை பற்றி அறிந்துக்கொள்ளுவோம்.
நரேந்திர தாமோதர்தாசு மோதி ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார். அவர் தாமோதர்தாசு முல்சந்த் மோதி மற்றும் அவரது மனைவி ஹீராபென்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். அவரது குடும்பத்தில் மொத்தம் எட்டு பேர். அவர்களை பராமரிக்க தந்தைக்கு இருந்தது ஒரு சிறிய தேநீர் கடை தான். ஏழை வீட்டில் பிறந்த நரேந்திர மோடி, தனது குழந்தை பருவத்தில் நிலைமை என்னவாக இருந்தாலும் தனது லட்சியத்தை கைவிடக்கூடாது என்று முடிவு செய்திருந்தார். குழந்தை பருவத்திலிருந்தே மன தைரியத்தை கற்றுக்கொண்டார். அதனால் ஒரு முறை தனது 17வது வயதில் குடும்பத்தை விட்டு வெளியேறி ஆன்மீக பயணத்தை மேற்கொண்டார்.
அவருக்கு இளம் வயதில் இருந்தே சுவாமி விவேகானந்தரை மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவரின் போதனைகளை கடைபிடிப்பவராக நரேந்திர மோடி இருந்தார். விவேகானந்தரின் உண்மையான பெயரும் நரேந்திரர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேகானந்தர் மீது மோடி மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்தார். அவரைப் போன்று ஒரு ஆன்மீக குருவாக ஆக விரும்பினார். அதற்காக அவர் ஆன்மீக பயணத்தில் இரண்டு ஆண்டுகளை கழித்தார்.
அதன்பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டார். தேசத்திற்காக உயிரைத் தியாகம் செய்யவும் கற்றுக்கொண்டார். ஆர்.எஸ்.எஸ் மூலம் அரசியலில் நுழையும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு தொண்டனாக பாஜக-வில் இணைந்து, தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நாட்டின் மக்களின் முன்னேற்றத்திற்காக கடுமையாக தொடர்ந்து உழைக்கத் தொடங்கினார்.
இதற்கு பிரதமர் மோடியின் மனஉறுதி தான் முக்கிய காரணம். அவர் தனது வாழ்வின் அனைத்து சிரமங்களையும் கடந்து, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஒரு தொண்டராக இணைந்து, இன்று உலகின் மிக சிறந்த தலைவராக உயர்ந்துள்ளார். இது அனைவருக்கும் சாத்தியமான விஷயம் அல்ல. உலகின் சிலருக்கு தான் இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும். அதில் பிரதமர் மோடியும் ஒருவர் என்பதில் ஐயமில்லை....!!
குழந்தை பருவத்திலிருந்தே கற்றுக்கொண்ட மன தைரியத்தின் வலிமையினால், மோடி இன்று உலகத் தலைவர்களில் ஒருவராகா மாறிவிட்டார். நாமும் அவரை வாழ்த்துவோம்!!