3 குழந்தைகளின் உயிரை பலி வாங்கிய டிராக்டர்!

ராஜஸ்தானின் ஜலவார் பகுதியில், நேற்று இரவு டிராக்டர் ஒன்று குடியிருப்பினில் நுழைந்ததில் 3 குழந்தைகள் பலியாகினர்!
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜலவார் பகுதியில், டிராக்டர் ஓட்டுனர் ஒருவரு குடித்துவிட்டு வாகனத்தை ஒட்டியதில் தவறுதலாக குடியிருப்பு ஒன்றில் வாகனத்தினை விட்டார்.
இச்சம்பவத்தில் 3 குழந்தைகள் உடல் நசுங்கி உயிர் இழந்தனர். இடுக்கில் இருந்து மீட்டு எடுக்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது!
ஜலவார் காவல்துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.