எதிர்வரும் மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சி வேட்பாளர்களாக அர்பிதா கோஷ், மௌசம் நூர், தினேஷ் திரிவேதி மற்றும் சுப்ரதா பக்ஷி ஆகியோரின் பெயர்களை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான ஒரு ட்வீட்டில், மேற்கு வங்க முதல்வர் பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தனது "நிலையான முயற்சியை" கருத்தில் கொண்டு, மார்ச் 26 தேர்தலுக்கான TMC வேட்பாளர்களில் பாதி பெண்களுக்கு ஒதுக்கியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.


கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மால்டா உத்தர் தொகுதியில் இருந்து திருமதி நூர் தோல்வியடைந்திருந்த போதிலும், பலூர்காட்டில் இருந்து கோஷ் மற்றும் பராக்பூர் தொகுதியில் இருந்து தினேஷ் திரிவேதி ஆகியோர் போட்டியிட்டனர்.



எனினும் 2014 மக்களவைத் தேர்தலில் தான் வென்ற இடமான கொல்கத்தா தட்சியில் பக்ஷி போட்டியிடவில்லை.


மாநிலங்களவைத் தேர்தலுக்கு இரண்டு பெண்களை நியமிக்க மம்தா பானர்ஜி எடுத்த முடிவு, நாடாளுமன்ற அரசியலில் அதிகமான பெண்களைக் கொண்டுவருவதும், பொறுப்பை ஒப்படைப்பதும் அவரது நோக்கத்தின் ஒரு பகுதியாகும் என்று திரினாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேற்கு வங்கத்தின் ஐந்து இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் மார்ச் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஐந்தாவது இடத்திற்கான தேர்தல் மாநிலத்தில் CPI(M) -காங்கிரஸ் பிணைப்புக்கான லிட்மஸ் சோதனையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.


மேற்கு வங்க சட்டசபையில் இடங்களைப் பகிர்ந்தளித்ததன் படி, ஆளும் திரினாமுல் காங்கிரஸுக்கு நாடாளுமன்றத்தின் மேல் சபையில் நான்கு இடங்கள் கிடைக்கும், அதே நேரத்தில் CPI(M)-காங்கிரஸ் அல்லது TMC-காங்கிரஸின் கூட்டு வேட்பாளர் ஐந்தாவது இடத்தை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆக நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள 55 இடங்களுக்கான தேர்தல் மார்ச் 26 அன்று நடைபெறும் என தெரிகிறது.


இதில் மகாராஷ்டிராவில் ஏழு இடங்கள், தமிழ்நாட்டில் ஆறு, மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் தலா ஐந்து, ஒடிசா, குஜராத் மற்றும் ஆந்திராவில் தலா நான்கு, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் அசாமில் தலா மூன்று இடங்கள், தெலுங்கானா, சத்தீஸ்கர், ஹரியானாவில் தலா இரண்டு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதேவேளையில் ஜார்க்கண்ட் மற்றும் இமாச்சல பிரதேசம், மணிப்பூர் மற்றும் மேகாலயாவில் தலா ஒரு இடங்களும் பட்டியிலிடப்பட்டுள்ளன.