புதுடெல்லி: கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலுவைக்கு முன்பு திரிசூலம் வைத்ததன் காரணமாக சர்ச்சை ஏற்ப்பட்டு உள்ளது. ஜூன் 15 ஆம் தேதி, இடுக்கியின் பஞ்சலிமாடுவில் சிலுவையின் முன் திரிசூலம் வைக்கப்பட்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்ச மற்றும் மிஷனரி அமைப்புக்கள் அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்ததாக இந்து அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. கேரளாவின் இடுப்பி மாவட்டத்தில் அமைந்துள்ள புனித மேரி தேவாலயம் அரசு நிலங்களை ஆக்கிரமித்ததாக கூறி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்தராஷ்டிரியா இந்து பரிஷத் சபை, தேவாலயத்திற்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. 


ஆனால் அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்ததாக இந்து அமைப்பு கூறுவது முற்றிலும் உண்மை இல்லை. அப்படி எந்தவித நிலத்தையும் தேவாலயத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட வில்லை என்று புனித மேரி தேவாலயம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.


இந்தநிலையில், அரசாங்க நிலங்களை ஆக்கிரமித்துள்ள தேவாலயங்கள் மீது கேரள அரசு எந்தவித  நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் பேராசிரியர் ராகேஷ் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார். விசா காலம் முடிந்தும் பல வெளிநாட்டு போதகர்கள் இன்னும் கேரளாவில் இருப்பதாகவும் கூறினார்.


மேலும் கேரளாவில் ஏராளமான மக்களை கிறிஸ்தவ மதத்தில் சேருமாறு கிறிஸ்துவ மிஷனரிகள் பிரச்சாரம் மேற்க்கொண்டு வருகிறது எனவும் பேராசிரியர் ராகேஷ் சின்ஹா குற்றம் சாட்டியுள்ளார்.