சேனல்களுக்கு தனிக்கட்டணம்; TRAI உத்தரவு ஒரு மாதம் நீட்டிப்பு!
சேனல்களுக்கு தனி தனிக் கட்டணம் வசூளிப்பதில் சிக்கல் என்பதால், TRAI விதிமுறையை நடைமுறை படுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது!
சேனல்களுக்கு தனி தனிக் கட்டணம் வசூளிப்பதில் சிக்கல் என்பதால், TRAI விதிமுறையை நடைமுறை படுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது!
தொலைக்காட்சி சேனல்களை இனி வாடிக்கையாளர்கள் தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்கலாம் என TRAI அறிவித்துள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை வரும் 29-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த நடைமுறை ஜனவரி 31-ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட்டாப் பாக்சுக்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்பதால் TRAI-ன் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில், சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையில், விருப்பப்பட்ட தொலைக்காட்சி சேனல்களை பார்க்க தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவை அடுத்த மாதம், அதாவது ஜனவரி 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக TRAI தரப்பில் ஆஜரான வக்கீல் விளக்கம் அளித்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, விசாரணையை வரும் ஜனவரி 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை, TRAI பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டார்.