ஐதராபாத்தில், மனநலம் பாதிக்கப்பட்ட இரட்டையர்களை அவர்களது தாய்மாமன் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தின் சித்தன்யபூரி பகுதியை சேர்ந்த 12-வயது இரட்டையர்கள் சுர்ஜனா ரெட்டி மற்றும் அவரது சகோதரர் விஷ்னுவரதன் ரெட்டி. இவர்கள் இருவம் பிறப்பால் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், இதனால் இவர்களை பார்த்துக்கொள்வதில் இவர்களது பெற்றோர்கள் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர்.


இந்நிலையில் இவர்களது தாய்மாமன் மல்லிகர்ஜூனா என்பவர் இவர்களை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். தன் தங்கை இவர்களை வளர்க சிரமப்படுவதாக எண்ணி இவர்களை கொலை செய்யும் அளவிற்கு துணிந்து இருவரையும் கொலை செய்துள்ளார்.


இதனையடுத்து கொலைசெய்யப்பட்ட குழந்தைகளின் உடலினை அவர் அப்புரப்படுத்த முயற்சிக்கையில் தனது வீட்டு உரிமையாளர் பார்வையில் சிக்கியுள்ளார்.


பின்னர் இந்த விவகாரம் குறித்து வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டப்பட்டுள்ள மல்லிகர்ஜூனா-வின் மீது புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் மல்லிகர்ஜுனா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருக்கு துனையாக இருந்து இவர்களது நண்பர்கள் இருவர் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.


மீட்கப்பட்ட குழந்தையின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்ட்டுள்ளதா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.