ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் புதன்கிழமை இரண்டு பேருந்துகள் மோதியதில் இரண்டு பேர் பலியாகினர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் நடந்த இந்த மோதல் மாவட்டத்தின் புலபலபட்டு-நாயுடுபேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஐத்தேபள்ளி கிராமத்திற்கு அருகே அதிகாலையில் அரங்கேறியது.


இந்த பேருந்துகளில் ஒன்று, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (ஏ.பி.எஸ்.ஆர்.டி.சி) வால்வோ பஸ் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருந்தது, மற்றொன்று தனியார் பஸ் சபரிமாலையிலிருந்து வந்துகொண்டிருந்தது.


மீட்புக் குழு விபத்து நடந்த இடத்தை அடைந்த பின்னர், வாயு கட்டர் மூலம் கதவுகளை வெட்டி  உயிரிழந்தவர்களை பேருந்திலிருந்து வெளியேற்றினர். அதிகாலை இந்த விபத்து நடந்ததால், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு மாற்ற ஆம்புலன்ஸ் போதுமானதாக இல்லாமல் இருந்தது.


இருப்பினும், உயிரிழந்தவர்களை சந்திரகிரி வட்டம் போலீசார் லாரியில் திருப்பதி RUIA மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தினால் என்.எச் -71 இல் பல கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுத்தது.


தனியார் பஸ்ஸின் டிரைவர் வாகனத்தை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று திருப்பதி நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது