குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வன்முறையில் துப்பாக்கிச் சூடு; மங்களூரில் 2 பேர் பலி
மங்களூருவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு பேர் பலியாகினர். 48 மணி நேரம் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்டு உள்ளது.
மங்களூரு: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதை அடுத்து, போராட்டங்கள் வன்முறையாக மாறி வருகிறது. இதனையடுத்து கர்நாடக உள்துறை அமைச்சகம், மங்களூரு நகரம் முழுவதும் மற்றும் தென் கர்நாடகாவை சேர்ந்த மாவட்டங்களில் மொபைல் இணைய சேவைகளை அடுத்த 48 மணி நேரம் தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) புதுடெல்லியின் சில பகுதிகளில் இணைய சேவைகள் நிறுத்தப்பட்ட பின்னர், உத்தரபிரதேசத்தின் அலிகர், கர்நாடகாவிலும் இணைய சேவைகள் தடை செய்யப்பட்டு உள்ளன.
உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரஜ்னீஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மங்களூருவில் "போலி செய்திகள் பரவும் வாய்ப்பு" இருப்பதால் இணைய சேவைகள் தடை செய்யப்படுவதாகவும், அமைதியை உறுதி செய்வதற்கான தடுப்பு நடவடிக்கை இது என்றும் அவர் கூறியுள்ளார்.
"மொபைல் சேவைகளை தடை செய்வதன் மூலம் தீவிர சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமைக்கு வழிவகுக்கும். ஏனென்றால் வதந்திகள் பரப்புவதற்கு சமூக ஊடக தளங்கள் பயன்படுத்தப்படலாம். வீடியோக்கள் மற்றும் படங்களை உணர்ச்சிகளைத் தூண்டும் திறன் கொண்டவை" என்று ரஜ்னீஷ் கோயலின் அறிவிப்பு கூறுகிறது.
இந்தியன் டெலிகிராப் சட்டப்பிரிவு 5 (2) இன் படி தொலைதொடர்பு சேவைகள் விதிகள் 2017 இன் தற்காலிக இணைய பணி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த தடை டிசம்பர் 19 இரவு 10 மணி முதல் தொடங்கி அடுத்த 48 மணி நேரம் நீடிக்கும்.
வியாழக்கிழமை அன்று, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மங்களூருவின் பல்வேறு பகுதிகளில் 6,000 க்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும், போரட்டக்காரார்கள் மற்றும் போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை பயன்படுத்தினர்.
பின்னர் போலீசார் மீது கற்கள் வீசப்பட்டதால், போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நமக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், ஒரு வீடியோவில் போரட்டக்காரார்கள் மீது போலிசார் துப்பாக்கிச் சூடு நடத்திய அம்பலமாகி உள்ளளது.
இந்த சம்பவத்தில் ஜலீல் குட்ரோலி (49), ந வுஷீன் பெங்க்ரே (23) ஆகிய இருவர் படுகாயமடைந்தனர். இரண்டு பேருக்கு எப்படி காயங்கள் ஏற்பட்டன என்று காவல்துறை அதிகாரப்பூர்வமாக கூறவில்லை, ஆனால் அவர்களுக்கு புல்லட் மூலம் காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று மருத்துவமனையின் வட்டாரங்கள் கூறுகின்றன.
CAAவுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முழு பலத்துடன் நடைபெற்று வருவதால், டெல்லியின் சில பகுதிகளிலும் இணைய தடைகள் செய்யப்பட்டு உள்ளன. ஜாமியா மில்லியா இஸ்லாமியாவைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், தெற்கு மற்றும் கிழக்கு டெல்லியின் சில பகுதிகளிலும், அனைத்து சேவைகளையும் தடுக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள குடிமக்களுக்கு அழைப்புகள், எஸ்எம்எஸ் இணையம் வசதி துண்டிக்கப்பட்டு உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அரசியல் கட்சிகளும் போரட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறி வருகிறது. மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.