மதுரா சம்பவம்: உ.பி அரசு நீதி விசாரணைக்கு உத்தரவு
மதுரா ஜவகர்பாத் பகுதியில் உள்ள 260 ஏக்கர் பூங்காவை ஆக்கிரமித்தவர்களை வெளியேற்ற உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத் கோர்ட்டு உத்தரவின் பெயரில் போலீஸ் நடவடிக்கை எடுத்தது. அப்போது கலவரம் வெடித்தது. இந்த மோதலில் 2 போலீசார் அதிகாரிகள் உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாரதீய ஜனதா வலியுறுத்தி வந்தது. பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் லக்னோவில் போராட்டமும் நடத்தப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் பாரதீய ஜனதா தலைவர் அஷ்வினி உபாத்யா தரப்பில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்தா சுப்ரீம் கோர்ட்டு மதுரா வன்முறை சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்துவிட்டது. மேலும் இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.
இதனை அடுத்து, உத்தர பிரதேச மாநில அரசு மதுரா வன்முறை சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி இம்தியாஷ் முர்தாஷா தலைமயில் விசாரணைக் கமிஷன் அமைத்துள்ளது.