புதுடில்லி: இன்று மக்களவையில் யுஏபிஏ திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்திற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்பொழுது அவர், பயங்கரவாதத்தை கையாள்வதற்கு கடுமையான சட்டத்திட்டம் தேவையாக உள்ளது என்று கூறினார். நக்சலைட்டுகளுக்கு அரசாங்கத்தின் இதயத்தில் இடமில்லை என்று அமித் ஷா கூறினார். இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்த மோடி அரசு அனுமதிக்காது என்றும் அமித் ஷா கூறினார்.


மேலும் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பயங்கரவாதத்திற்கு எதிராக ஏன் கடுமையான சட்டங்களை உருவாக்குகிறீர்கள் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன?" நான் சொல்கிறேன், பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான மற்றும் மிகவும் கடுமையான சட்டம் இருக்க வேண்டும். இந்த சட்டம் இந்திரா காந்தி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டது. அதில் சிறிய திருத்தத்தை நாங்கள் (மத்திய அரசு) செய்கிறோம்.


"இந்த சட்டத்தின் கீழ், ஒருவர் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அல்லது பங்கேற்றால், அவர் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்படுவார். பயங்கரவாதத்தை வளர்ப்பதற்கு உதவி செய்பவர், நிதி வழங்குபவர், பயங்கரவாத தத்துவங்களை பரப்புவது அல்லது பயங்கரவாதக் கோட்பாட்டை இளைஞர்களின் மத்தியில் கொண்டு செல்ல முயற்சிப்பவர்கள் ஒரு பயங்கரவாதியாக அறிவிக்கப்பட வேண்டுமா? என கேள்வியும் எழுப்பினார். 


மேலும் பயங்கரவாதம் துப்பாக்கியால் உருவாகுவது இல்லை. பரப்புரை, மூளைச்சலவை மற்றும் வெறித்தனத்திலிருந்து உருவாகுவது ஆகும் என்றும் கூறினார்.