புதுடெல்லி: டிசம்பர் மாதம் நடைபெற உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்க்கான நெட் தகுதித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணியில் சேருவதற்கு நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்தவகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு வரை நெட் தேர்வை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) சார்பில் சிபிஎஸ்இ அமைப்பு நடத்தி வந்தது. 


இதனையடுத்து கடந்த இரண்டு வருடங்களாக இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை எனப்படும் புதிய அமைப்பு நெட் உட்பட அனைத்து தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.


இந்த ஆண்டுக்காக நெட் தேர்வு டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நடத்தப்படலாம். ஆனால் தேர்வு நடக்கும் தேதிகள் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்படவில்லை.


இந்தநிலையில், நெட் தேர்வு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்-லைன் மூலம் www.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி தேதி அக்டோபர் 9 ஆகும். அதேபோல டிசம்பர் 31 ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.


நெட் தேர்வில் 100 மற்றும் 200 மதிப்பெண்களுக்கான இரண்டு தாள்கள் இடம்பெற்றிருக்கும். இத்தேர்வுக்கு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடங்கள், பொருளாதாரம், வணிகவியல், வரலாறு, சமூகவியல், அரசியல் அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.