ஆதார் குறித்த தேவையற்ற முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையாக ஆதாரில் முகப்பதிவு முறையை அமல்படுத்தப்படுவதை கட்டயமக்கியுள்ளதாக UIDAI தெரிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.


ஆதாரைக் கொண்டு ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்யும் போது கைரேகை மட்டுமின்றி புகைப்படமும் எடுக்க வேண்டும் என தேசிய அடையாள அட்டை ஆணையமான UIDAI தெரிவித்துள்ளது. சிம்கார்டுகள் வாங்குதல், வங்கி சேவைகள் என பல்வேறு சேவைகளுக்கு அடையாள ஆவணமாக ஆதார் தகவல்கள் கேட்கப்படுகின்றன. பொதுவாக ஆதார் அடையாளங்களை உறுதிப்படுத்த கைரேகைகள் பெறப்படுகின்றன. ஆனால் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படம் எடுத்து அதுவும் பொருந்தி போகிறதா என்பதை காண வேண்டும் என UIDAI தெரிவித்துள்ளது. 


இதற்காக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு UIDAI அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் ஆதார் தகவல்களை உறுதிப்படுத்தும் போது புகைப்படங்கள் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், அது தண்டனைக்குரிய குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயதானவர்கள் மற்றும் விவசாயிகள் போன்றோரின் கைரேகைகளை உறுதிப்படுத்துவதில் அடிக்கடி சிக்கல் ஏற்படுவதால், புகைப்படத்தை கொண்டு தகவலைகளை உறுதிப்படுத்துவதன் மூலமாக அந்த சிக்கல்கள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.