கோவிஷீல்ட் தடுப்பூசி இரண்டு டோஸ் போட்டிருந்தாலும் இங்கிலாந்து வரும் இந்தியர்கள், 14 நாட்கள் குவாரண்டைன் செய்ய வேண்டும் என்று இங்கிலாந்து சுகாதாரத் துறை அறிவித்தது. போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு விதித்த புதிய கோவிட் தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளில், கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது சர்ச்சை கிளப்பியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21, 2021) கருத்து தெரிவித்த வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் ஷ்ரிங்லா கோவிஷீல்ட் கோவிட் -19 தடுப்பூசியை அங்கீகரிக்காதது பாரபட்சம் காட்டும் நடவடிக்கை என்றும் இது இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் இந்தியர்களை பெரிதளவு பாதிக்கும் என்றும் கூறினார்.


இங்கிலாந்தின் இந்த அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தடுப்பூசி விவகாரம் குறித்து பிரிட்டன் அதிகாரிகளுடன் பேசியதாகக் கூறப்படுகிறது.


திருத்தப்பட்ட பயண ஆலோசனையில், கோவிஷீல்ட் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக தகுதி பெறுகிறது என்று இங்கிலாந்து அரசு கூறியிருந்தது. "அஸ்ட்ராஜெனெகா (AstraZeneca), கோவிஷீல்ட் (Covishield), அஸ்ட்ராஜெனெகா வக்ஸெவ்ரியா (AstraZeneca Vaxzevria) மற்றும் மாடர்னா டகேடா (Moderna Takeda) ஆகிய நான்கும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக தகுதி பெறுகின்றன" என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ALSO READ | அமெரிக்காவில் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பீதியில் பெற்றோர்


அக்டோபர் 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியில் இருந்து, குறிப்பிட்ட நாடுகளில், அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி எடுத்தவர்கள் "முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாக" கருதப்படுவார்கள் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 


இருப்பினும், கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட இந்தியர்கள் இன்னும் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி தொடர்பான இந்த பிரச்சினை கோவிஷீல்டில் இல்லை. இந்தியாவின் தடுப்பூசி சான்றிதழ் மீது சந்தேகம் காரணமாக குவார்ண்டைன் செய்யப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


ALSO READ | இங்கிலாந்தின் ‘அங்கீகரிக்கப்பட்ட’ தடுப்பூசி பட்டியலில் கோவிஷீல்ட் நீக்கம்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR