புதுடில்லி: 30 ஆண்டுகால நடைமுறையைத் தொடர்ந்து, அணு சக்தி நிலையங்கள் மீது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தாக்குதல் நடத்துவதை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ், நாட்டில் உள்ள அணுசக்தி நிலையங்கள் தொடர்பான பட்டியலை இரு நாடுகளும் பரஸ்பரம் வெள்ளிக்கிழமை பரிமாறிக்கொண்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணுசக்தி  நிலையங்கள் மீதான தாக்குதலை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் உள்ள அணுசக்தி நிலையங்கள் குறித்த பட்டியலை இரு நாடுகளும் பரிமாறிக்கொண்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.


இந்த நடைமுறை புதுடெல்லி (Delhi)  மற்றும் இஸ்லாமாபாத்தில் ராஜீய நிலையில் ஒரே நேரத்தில் மேற்கொள்ளப்பட்டது.


"இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று புதுடெல்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் ஒரே நேரத்தில் ராஜீய நிலையில், இந்த பட்டியலை பரிமாறிக் கொண்டன. அணுசக்தி நிலையங்களுக்கு எதிரான தாக்குதலை தடை செய்வதற்கான ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது" என்று MEA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


காஷ்மீர் பிரச்சினை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான  உறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பட்டியல் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டது.


இந்த ஒப்பந்தம் டிசம்பர் 31, 1988 இல் கையெழுத்தானது. ஒப்பந்தம் ஜனவரி 27, 1991 முதல் நடைமுறைக்கு வந்தது.


ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி முதல் தேதி அன்று, ஒப்பந்தத்தின் கீழ், அணுசக்தி நிலையங்கள் குறித்து இரு நாடுகளும் பரஸ்பரம் தெரிவிக்க வேண்டும் என இந்த ஒப்பந்தம் கூறுகிறது.


1992 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முறையாக பட்டியல் பரிமாற்றம் நடைபெற்றது. அந்த வகையில், இன்று 30 வது பரிமாற்றமாகும்.


ALSO READ | அமெரிக்காவில் H-1B விசா தடையை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து டிரம்ப் உத்தரவு


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR