பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேற்கு வங்காளத்திற்கு ஒரு நாள் விஜயம் மேற்கொண்ட ஷா, கொல்கத்தாவில் நடந்த பேரணியில் உரையாற்றியபோது, ​​"அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் வரை நாங்கள் நிறுத்த மாட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.


நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 'அகதிகள் மற்றும் சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துகின்றன' என்றும் பாஜக தலைவர் குற்றம் சாட்டினார். "எதிர்க்கட்சி சிறுபான்மையினரை அச்சுறுத்துகிறது ... சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு நபருக்கும் CAA குடியுரிமை மட்டுமே அளிக்கிறது, மேலும் இது உங்கள் குடியுரிமையை பாதிக்காது" என்றும் அவர் தெரிவத்துள்ளார்.



2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனது கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வெல்லும் என்று கூறிய அவர்., மாநிலத்தில் அடுத்த அரசாங்கத்தை பாஜக உருவாக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.


2019 மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தின் இரண்டாவது மிக சக்திவாய்ந்த கட்சியாக பாஜக உருவானது. இந்த தேர்தலின் போது 42 இடங்களில் 18 இடங்களைப் பிடித்தது பாஜக, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.


பேரணியில் மேற்கு வங்கத்தில் கட்சியின் 'ஆர் நொய் அன்னே' (இனி அநீதி இல்லை) பிரச்சாரத்தையும் அவர் தொடங்கினார்.


முன்னதாக, உள்துறை அமைச்சர் ராஜர்ஹாட்டில் தேசிய பாதுகாப்பு காவலரின் 29 சிறப்பு கலப்பு குழு வளாகத்தை திறந்து வைத்தார். நாட்டில் பிளவுகளை உருவாக்கி அமைதியை சீர்குலைக்க விரும்பும் மக்கள் NSG-க்கு அஞ்ச வேண்டும் என்று அவர் தொடர்ந்து கூறினார்.


மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின்னர் ஷா மாநிலத்திற்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.


இதற்கிடையில், ஷா பயணம் மேற்கொண்ட விமான நிலையத்திற்கு வெளியே 'கோ பேக்' கோஷங்களை எழுப்பியதால், எதிர்க்கட்சிகள் வீதிக்கு வந்தன. ANI அறிக்கையின்படி, கொல்கத்தாவின் வடக்கு புறநகரில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த இந்திய மாணவர் கூட்டமைப்பு மற்றும் இடது கட்சிகளின் உறுப்பினர்கள், ஷா நகருக்கு வந்ததும் கருப்பு கொடிகள் மற்றும் கருப்பு பலூன்களைக் காட்டினர் என கூறப்படுகிறது.