கோவா: அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கோவாவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போதிலிருந்தே அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் (Delhi Chief Minister Arvind Kejriwal) கோவா மாநிலத்தின் வேலைவாய்ப்பு தொடர்பாக ஏழு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (செவ்வாய்க்கிழமை) பனாஜியில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, ​​ஆம் ஆத்மி கட்சி ( Aam Aadmi Party) ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஊழலை ஒழித்து, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகி தரப்படும் என்றார். 


மேலும் பேசிய கெஜ்ரிவால், "யாராவது இங்கு (கோவா) அரசு வேலையில் சேர வேண்டும் என விரும்பினால், அவர்களுக்கு அமைச்சரின் ஆதரவு இருக்க வேண்டும் என இளைஞர்கள் என்னிடம் சொல்வார்கள். எம்எல்ஏ பரிந்துரை மற்றும் லஞ்சம் இல்லாமல் கோவாவில் அரசு வேலை பெறுவது சாத்தியமில்லை. இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம். கோவா இளைஞர்களுக்கு அரசு வேலைகளில் முன்னுரிமை அளிப்போம்.


 



ALSO READ | 'ஒரு நாள் கூட அவகாசம் கிடையாது’: உள்ளாட்சி தேர்தல் குறித்த மனுவிற்கு உச்சநீதிமன்றம் காட்டம்


டெல்லி முதல்வரின் கூற்றுப்படி, "ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒருவருக்கு அரசு வேலை அளிக்கப்படும் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை ஒவ்வொரு மாதமும் மூவாயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்" எனக் கூறினார்.


அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த ஏழு முக்கிய அறிவிப்பு:


1 - ஒவ்வொரு துறையிலும் அரசு வேலையில் சேர கோவா இளைஞர்களுக்கு உரிமை உண்டு. 
2 - கோவா மாநிலத்தின் ஒவ்வொரு குடும்பத்திலிருந்து வேலையில்லாத ஒரு இளைஞருக்கு அரசு வேலை கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்.
3 - வேலைவாய்ப்பு இல்லாதா இளைஞர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.
4 - 80 சதவீத வேலைகள் கோவா இளைஞர்களுக்கே ஒதுக்கித் தரப்படும். தனியார் துறை வேலைவாய்ப்புகளிலும் இத்தகைய ஒரு சட்டம் கொண்டு வரப்படும்.
5 - கொரோனா காரணமாக, கோவாவின் சுற்றுலாவில் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுலாத்துறையைச் சார்ந்துள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு மறுசீரமைப்பு செய்யும் வரை, அவர்களின் குடும்பங்களுக்கு ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
6 - சுரங்கத்துறையில் சார்ந்த குடும்பங்களுக்கும் அவர்களுக்கான வேலை மறுசீரமைப்பு செய்யும் வரை, மாதம் ஐயாயிரம் ரூபாய் வழங்கப்படும்.
7 - மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க ஸ்கில் பல்கலைக்கழகம் (Skill University) திறக்கப்படும்.


ALSO READ | AIADMK vs PMK பிரேக் அப்! ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்து போட்டி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR