2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் முக்கிய பத்து சிறப்பு அம்சங்கள்...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள மத்திய அரசின் முதல் 2019-2020 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பயன் பெரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்தார். கல்வி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களையும் அவர் அறிவித்திருந்தார். 


நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கலின் போது, வருமான வரி உச்சவரம்பு விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமானம் கொண்ட தனி நபர்களுக்கு, வருமான வரி கிடையாது என்றும், அதற்கு மேல் உள்ள வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய சலுகையாக இது கருதப்படுகிறது.


இன்றைய 2019-2020 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டின் முக்கிய 10 சிறப்பு அம்சங்கள்: 


> உயர் கல்வியை மேம்படுத்த, புதிய கல்விக்கொள்கை அறிமுகம் செய்யப்படும். உலக அளவில் இந்திய கல்வி முறை முதலிடம் பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 


> தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கான சிறப்பு டிவி சேனல் உருவாக்கப்படும்.


> ஒரே நாடு ஒரே மின்தடம் எனும் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் சம அளவிலான மின்சாரம் விநியோகம் செய்ய நடவடிக்கை. 


> ஹர் கர் ஜல் திட்டத்தின் மூலம் 2024 ஆம் ஆண்டுக்குள் குழாய் மூலம் ஊராக பகுதிகளில் உள்ள எல்லா வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர். 


> என்சைக்ளோபீடியா போன்று காந்தி பீடியா அறிமுகப்படுத்தப்பட்டு இளைஞர்களிடம் காந்திய கொள்கைகள் கொண்டு சேர்க்கப்படும். 


> போக்குவரத்து துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். சிவில் விமான போக்குவரத்து துறையை மேம்படுத்தி, தரமான சேவை வழங்க நடவடிக்க எடுக்கப்படும். 


> உடான் திட்டத்தின் மூலம், பல்வேறு சிறு நகரங்களில் விமான போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. அத்திட்டம் மேலும் விரிவுபடுத்தப்படும்.


> விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களை வர்த்தகம் செய்யும் வகையில் கொள்கைகள் உருவாக்கப்படும். 


> சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 59 நிமிடங்களுக்குள் ஒரு கோடி ரூபாய் வரை கடன் கொடுக்கும் திட்டம்.


> விண்வெளி வர்த்தக வாய்ப்புகளை பயன்படுத்த இஸ்ரோவின் கீழ் செயல்படும் புதிய நிறுவனம் உருவாக்கப்படும். 


> சர்வதேச அளவில் போட்டியிட இந்திய மாணவர்கள் தயாராகும் வரை உயர் கல்வித்துறையில் புதிய கொள்கை. 


> 5 லட்சம் ரூபாய்க்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை


> ஜிஎஸ்டி பதிவு சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு 2 சதவீத வட்டி மானியத்திற்கு ரூ.350 கோடி ஒதுக்கீடு


> பிரதமர் கிராமீன் ஆவாஜ் திட்டத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் 2021ஆம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டப்படும்.


> தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களுக்கான இறக்குமதி வரி 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வு