Modi Govt Presented White Paper in Lok Sabha: இன்று மக்களவையில் பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் மோடி அரசின் கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார சாதனைகளை பட்டியலிட்டு உள்ளார். மேலும் வெள்ளை அறிக்கையில் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு குறித்தும் குறிப்பிடப்பட்டு உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"வெள்ளை அறிக்கை" மீது நாளை விவாதம் நடைபெறும்


மத்திய அரசின் இந்த "வெள்ளை அறிக்கை" நாளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இடைக்கால பட்ஜெட் உரையின் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 'வெள்ளை அறிக்கை' நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடக் காரணம் என்ன?


10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா 1.9 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் (ஜிடிபி) உலகின் 10வது பெரிய பொருளாதார நாடக இருந்தது.


அடுத்த 3 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் ஜிடிபியுடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.


எனவே இதனை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள மோடி அரசு பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிடுகிறது என பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 


பொருளாதாரம் குறித்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் மத்திய அரசாங்கம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு உள்ளது.


மேலும் படிக்க - Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்



"வெள்ளை அறிக்கை" பற்றி எதிர்க்கட்சிகளின் கருத்து


மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், "மத்திய அரசின் வெள்ளை அறிக்கையால் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்றார். 


ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திடம் பேசிய சவுத்ரி, "ஆனால் மெஹுல் சோக்ஸியின் ஆவணங்களும் சபைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அவர்களின் ஆட்சியில் வங்கிகள் ஏன் கொள்ளையடிக்கப் படுகின்றன? வங்கிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்பவர்களுக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?" என்பதையும் குறித்து பேச வேண்டும் என்றார்.


மேலும் படிக்க - Budget 2024: அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் நோக்கம்- நிதி அமைச்சர்


திமுக எம்பி தயாநிதி மாறன் கூறியது


முன்னதாக, திமுக எம்பி தயாநிதி மாறன் பேசுகையில், "நிதி அமைச்சர் புகழாரம் சூட்டுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார், ஆனால் விநியோகம் பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த 10 வருடங்களில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் வெள்ளை அறிக்கையை முன்வைக்கிறார்கள்" என்றார். 


"நாட்டு மக்கள் ஏற்கனவே ஏமாற்றத்தில் உள்ளனர். மேலும், செயல்திறன் ஊக்கத்தொகைகள் பிரிட்ஜ் நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதையும், தகுதியானவர்களுக்குச் செல்லவில்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த பட்ஜெட் மூலம் மக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்" என்றார். 


மேலும் படிக்க - தென் மாநிலங்களுக்கு தொடரும் அநீதி.. தனி நாடு கோரிக்கைக்கு எங்களை தள்ளாதீர்கள் -கர்நாடகா எம்.பி


காங்கிரஸ் கட்சியை குறிவைத்து தாக்கிய பிரதமர் மோடி


நேற்று ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதில் அளித்து பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாகத் தாக்கி பேசினார்.


அவர், அதிகார பேராசையில் ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்த காங்கிரஸ், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கலைத்த காங்கிரஸ், நாட்டின் அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தின் மாண்பையும் பின்னுக்கு தள்ளி, பத்திரிகைகளைக் கட்டுப்படுத்தி, நாட்டை அடக்க முயன்றது யார்? 


இந்திய பொருளாதாரத்தை 10 ஆண்டுகளில் 11வது இடத்திற்கு காங்கிரஸ் கொண்டு வந்தது. அதே 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை 5வது இடத்திற்கு நாங்கள் கொண்டு வந்துள்ளோம். ஆனால் இந்த காங்கிரஸ் நமக்கு பொருளாதாரக் கொள்கைகளைப் பற்றி பாடம் நடத்துகிறது என கிண்டல் செய்தார்.


இந்த முறை காங்கிரஸால் 40 தொகுதிகளில் கூட வெல்ல முடியாது. காங்கிரஸ் கட்சி சிந்திக்க முடியாத அளவுக்கு காலாவதியாகி விட்டது. அவர்களின் சிந்தனை பழையதாகி விட்டது என கடுமையாகத் தாக்கி பேசினார் பிரதமர் மோடி


மேலும் படிக்க - பட்ஜெட் உரையில் மிடிள் கிளாசுக்கு சூசகமாக குட் நியூஸ் சொன்ன நிதி அமைச்சர்: நோட் பண்ணீங்களா?


மோடி அரசுக்கு எதிராக "கருப்பு அறிக்கை" வெளியிட்ட காங்கிரஸ்


மத்தியில் பாஜக தலைமையிலான மோடி அரசின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து காங்கிரஸ் கட்சி இன்று கருப்பு அறிக்கையை (Black Paper) வெளியிட்டது.


அதில், நாட்டின் மிக முக்கியப் பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம். அதைக்குறித்து மோடி அரசு ஒருபோதும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து பேசுவதில்லை. 


கடந்த 10 ஆண்டுகளில் பாஜகவால் 411 எம்எல்ஏக்கள் வாங்கி உள்ளனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துள்ளனர். ஜனநாயகத்தை அழிக்கிறார்கள்.


நாட்டின் தற்போதைய பணவீக்கத்தை நேரு காலத்துடன் ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். சம்பந்தமில்லாத விஷயங்களைப் பேசுகிறார்கள். மாநிலங்களுக்கு தரவேண்டிய நிதியை தருவதில்லை. மாநிலங்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டுகிறார்கள்" என காங்கிரஸ் கூறியுள்ளது.


மேலும் படிக்க - மோடி அரசின் 10 ஆண்டு கால "தோல்விகள்" -கருப்பு அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ