புது டெல்லி: இந்தியாவில் 81 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது, இதில் 64 இந்திய குடிமக்கள் மற்றும் 17 வெளிநாட்டினர் அடங்குவார்கள். 17 வெளிநாட்டினர்களில் 16 பேர் இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டை சேர்ந்தவர். கை மற்றும் சுவாசிப்பதில் சுகாதாரத்தை கடைபிடிக்கவும், அதிகமான கூட்டம் இருக்கும் பகுதிகளில் இருந்து விலகி இருத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மக்களுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுவரை, இந்தியாவில் 81 உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன,. அவற்றில் 64 இந்தியர்கள், 16 இத்தாலியர்கள் மற்றும் 1 கனடா நாட்டினர். இந்தியாவுக்குத் திரும்பும் அனைத்து பயணிகளும் தங்கள் பயண விவரங்களை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். மேலும் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கு முன் அனைவரும் முகமூடி அணிய வேண்டும் என்று என்று சுகாதார அமைச்சின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர் கூட்டத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கவும், பாதிப்பு இருக்கிறதா என்று அறிந்துக்கொள்ளவும் சோதனைச் சாவடிகள் மூலம் சர்வதேச போக்குவரத்தை ஆய்வு செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக 37 சோதனைச் சாவடிகள் இந்திய அரசிடம் உள்ளன. அவற்றில் 19 சோதனைச் சாவடிகள் வழியாக இந்தியாவுக்கு வர போக்குவரத்து அனுமதித்துள்ளோம். 


மேலும் மேலிடத்தில் இருந்து அறிவிப்பு வரும் வரை பங்களாதேஷில் இருந்து எல்லை தாண்டிய பேருந்துகள் மற்றும் ரயில்கள் நிறுத்தி வைக்கப்படும். இருப்பினும், பூட்டானிய மற்றும் நேபாள குடிமக்கள் இந்தியாவுக்கு விசா இல்லாமல் வரலாமல் என்று சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.