ராம்லீலா நாடகத்தில் ஜனகர் மகாராஜா வேடத்தில் ஹர்ஷவர்தன் நடித்துள்ளது பார்வையாளர்களை வியபாடைய வைத்துள்ளது..! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாடுமுழுவதும் நவராத்திரி விழா துவங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் போது பல பகுதிகளில் ராம்லீலா நாடகம் நடத்தபடுவது வழக்கம். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற லவகுசா ராம் லீலா நாடகத்தில், மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன், சீதையின் தந்தையான ஜனகன் வேடத்தில் நடித்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சி பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 



தசரா பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் தலைநகர் டெல்லியில், ராமாயணத்தை விளக்கும் வகையில் லவகுசா ராம்லீலா நாடகம் நடத்தப்படுவது வழக்கமாகும். இந்த ஆண்டில் வரும் 19 ஆம் தேதி தசரா பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், டெல்லியில் நடைபெற்ற ராம்லீலா நாடகத்தில், சீதையின் தந்தையான ஜனகன் வேடத்தில், மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் நடித்தார். 



இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சீதா தேவியின் தந்தையான ஜனகர் மகாராஜா வேடத்தில் நடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. டில்லியில் உள்ள லவ குஷா ராம்லீலா கமிட்டி சார்பில் இந்த நாடகம் நடத்தப்பட்டது. எனது சிறு வயதில் செங்கோட்டை மற்றும் சாந்தினி சவுக் பகுதிகளில் நடந்த ராம்லீலா நாடகங்களை பார்த்துள்ளேன். மேடையில் நடிப்பது மறக்க முடியாத அனுபவம் என பதிவிட்டுள்ளார். மேலும், இவரது இந்த செயலுக்கு பலரும் ட்விட்டரில் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.