புதுடில்லி: பாஜக மூத்த தலைவரும், மத்திய குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு துறை அமைச்சருமான உமாபாரதி, வரும் 2019-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றாலும், மாற்றத்திற்கான அரசியலில் தனது பங்கு எப்போதும் இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். 


அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தொடர்ந்து போராட உள்ளதாவும், கங்கை நதியினை தூய்மை செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்துள்ள உமா பாரதி, தனது தேர்தல் விலகளுக்கு காரணமும் இதுதான் என குறிப்பிட்டுள்ளார். முன்னதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜூம், வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ஆம் தேதி துவங்கி ஒன்றரை ஆண்டுகள் காங்கை யாத்திரை மேற்கொள்ளவிருக்கும் உமா பாரதி, இடைப்பட்ட காலங்களில் கங்கை கரையின் பகுதியில் தங்கி கங்கை நதியினை தூய்மை படுத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட விவரங்களை கட்சி தலைமையிடம் தெரிவித்து அனுமதி பெற்ற பின்னர் அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக பேசிய அவர், ராமர் கோவில் என்பது கட்சிகளுக்கு இடையேயான போராட்டம் இல்லை, மக்களின் உணர்வுகளுக்கு இடையேயான போராட்டம். இதனை மக்கள் உணரும் தருணத்தில் ராமர் கோவில் அமையும், அதர்கான வேலைகளிலேயே தான் ஈடுப்படபோவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.