நாளை திங்களன்று நடைப்பெறவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு-செலவுத் திட்ட அமர்வுக்கு முன்னதாக இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய தினத்தில் இரண்டு கூட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. அதன்படி மாலை 4.00 மணியளவில் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த் குமார் முன்னிலையிலும், பின்னர், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் முன்னிலையில் மாலை 7.30 மணியளவில் இரண்டாவது கூட்டமும் நடைப்பெறும்.


இன்று திட்டமிடப்பட்ட முதல் கூட்டமானது இன்று மாலை 4 மணியளவில் துவங்கியது.



இந்த அமர்வில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் ஜெய்திரதிதா சிந்தி, எஸ்.பி. தலைவர் முலாயம் சிங் யாதவ், நரேஷ் அகர்வால், அப்னா தல் அனுப்ரியா படேல், என்.சி.பீ. தலைவர் தரிக் அன்வர், சிபிஐ தலைவர் டி. ராஜா, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, டி.ஆர்.எஸ் தலைவர் கேசவ் யாதவ், டிஎம்சி தலைவர் டெரக் ஓ பிரையன் மற்றும் சந்திப் பாண்டியோபாத்யாய், அஇஅதிமுக வேட்பாளர் நவீனேத் கிருஷ்ணன் மற்றும் தி.மு.க.வின் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.