புதுடெல்லி: தேசிய தலைநகரான தில்லியில் (Delhi) நாளுக்கு நாள் மாசுபாட்டின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. மாசின் அளவு அதிகமாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதற்கு உள்ள பல காரணிகளில் வாகனங்கள் ஏற்படுத்தும் மாசுமாடும் ஒரு முக்கிய காரணமாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த காற்று மாசுபாட்டை (Air Pollution) கட்டுக்குள் கொண்டு வர, டெல்லி அரசு (Delhi Government) புதன்கிழமை "ரெட் லைட் ஆன், காடி (வாகனம்) ஆஃப்" என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.


சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் மக்களுக்கு ரோஜாப்பூக்களை வழங்கி, பிரச்சாரத்தில் பங்கேற்கவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும், குறிப்பாக சிக்னலில் ரெட் லைட் இருக்கும் வேளையில் காத்திருக்கும்போது, தங்கள் வாகனங்களின் எஞ்சினை அணைக்கும்படியும் கேட்டுக்கொண்டனர்.


இதற்கிடையில், அரசாங்கம் குடிமக்களின் முழு ஆதரவையும் பெற்று வருகிறது.


உச்சநீதிமன்ற போக்குவரத்து சிக்னலில், ஒரு பயணி, சிக்னலில் சிவப்பு விளக்கு வந்தபோது, தான் தன் கார் எஞ்சினை அணைத்ததாக கூறினார். "இந்த முயற்சி டெல்லியில் ஏராளமான காற்று மாசுபாட்டைக் குறைக்கும் என்று நான் நம்புகிறேன்" என்கிறார் ஜீது என்ற அந்த நபர்.


ALSO READ: இனி 3 ரூபாய்க்கு கிடைக்கும் மாஸ்க், இந்த மாநிலத்தில் அறிவிப்பு....


இதற்கிடையில், டெல்லியில் காற்று மாசுபாடு அளவு புதன்கிழமை மோசமாக இருந்தது. காற்றின் தர குறியீடு 103 என்ற மோசமான நிலையில் இருந்தது. விரிவான அளவுகள் 57 ug / m3 PM2.5 matter மற்றும் 66 ug / m3 PM10 matter என இருந்தன.


டெல்லி அரசின் இந்த பிரச்சாரத்திற்கு மக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. அரசின் இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் டெல்லி மக்கள் தங்கள் ஒத்துழைப்பை அரசுக்கு அளித்து வருகிறார்கள்.


இப்படிப்பட்ட புது முயற்சிகளையும் பயனளிக்கும் முன்முயற்சிகளையும் அனைத்து மாநில அரசுகளும் கண்டிப்பாக எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது மெதுவாக பூமியை அழித்துக் கொண்டிருக்கின்றது. நம் வருங்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான, சுத்தமான பூமியை விட்டுச் செல்ல வேண்டியது நமது கடமை என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.   


ALSO READ: வேளாண் சட்டத்தை எதிர்க்கும் பெரும்பாலானோருக்கு சட்ட விபரம் தெரியவில்லை: ஆய்வு


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR