ஒரு நாட்டில் இரவு உணவு, வேறொரு நாட்டில் உறக்கம்: வினோத கிராமமும் அதன் தலைவரும்!!
ஒரு நாட்டில் இரவு உணவு சாப்பிட்டு, வேறு ஒரு நாட்டில் தூங்கச் செல்லும் கிராமத் தலைவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கூட இருக்க முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும் என்பதுதான் பதில்!! அதுவும் நம் நாட்டிலேயே அப்படி ஒரு கிராமம் உள்ளது.
ஒரு நாட்டில் இரவு உணவு சாப்பிட்டு, வேறு ஒரு நாட்டில் தூங்கச் செல்லும் கிராமத் தலைவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அப்படி கூட இருக்க முடியுமா என்று கேட்டால், கண்டிப்பாக முடியும் என்பதுதான் பதில்!! அதுவும் நம் நாட்டிலேயே அப்படி ஒரு கிராமம் உள்ளது.
இந்த கிராமம் ஒரு அழகான தனித்துவமான கிராமம். பல தனித்தன்மைகளை தன்னகத்தே கொண்டுள்ள கிராமம்.
இந்த கிராமத்தின் பெயர் லோங்வா (Longwa). இந்த கிராமத்தின் ஒரு பாதி இந்தியாவிலும் (India) மற்றொரு பாதி மியான்மரிலும் (Myanmar) உள்ளது. இந்த கிராமத்தின் மற்றொரு விசித்திரமான விஷயம் என்னவென்றால், பல நூற்றாண்டுகளாக இங்கு வாழும் மக்களிடையே எதிரிகளின் தலையைத் துண்டிக்கும் பாரம்பரியம் இருந்தது. இது 1940 ஆம் ஆண்டில் தடைசெய்யப்பட்டது.
நாகாலாந்தின் (Nagaland) மோன் மாவட்டத்தில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மியான்மர் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் கடைசி கிராமமாகும் லோங்வா. கொயாங்க் பழங்குடியினர் இங்கு வாழ்கின்றனர். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்களாக கருதப்படுகின்றனர். அவர்கள் தங்களது குலத்தின் சக்தியை காப்பாற்றிக்கொள்ளவும் நிலத்தைக் கைப்பற்றவும் அண்டை கிராமங்களுடன் அடிக்கடி சண்டையிடும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர்.
1940 க்கு முன்னர், கொன்யாக் பழங்குடியினர் தங்கள் குலத்தையும் அதன் நிலத்தையும் காப்பாற்றிக்கொள்ள எதிரிகளுடன் போராடி அவர்களது தலையைத் துண்டிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். கோயாங்க் பழங்குடியினர் தலை வேட்டைக்காரர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த பழங்குடியினரின் பெரும்பாலான கிராமங்கள் மலையின் உச்சியில் இருந்தன. ஆகையால் அவர்களால் எதிரிகளின் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருக்க முடிந்தது.
இருப்பினும், 1940 ஆம் ஆண்டில், தலையை துண்டிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டது. 1969 க்குப் பிறகு, இந்த பழங்குடி கிராமங்களில் தலை துண்டிப்பு சம்பவம் நடந்ததாகத் தெரியவில்லை.
கோயாங் பழங்குடியினர்களில் கிராமத் தலைவர் தான் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். இவர் பல கிராமங்களின் தலைவராக இருக்கிறார். அவர் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துகொள்ள முடியும். சில தலைவர்களுக்கு 60-க்கும் மேற்பட்ட மனைவிகள் கூட இருந்துள்ளனர்.
ALSO READ: இப்படியும் சில மனிதர்கள்: பறவைக்காக இருளைத் தழுவிக் கொண்ட அற்புத கிராமம்!!
இந்த கிராமத்தை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பது எப்படி என்று தெரியாமல், எல்லைக் கோடு கிராமத்தின் வழியாகச் செல்லட்டும் என பல ஆண்டுகளுக்கு முன்னர் முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதனால் இந்த கிராமத்தில் எந்த பிரச்சனையும் வந்ததில்லை. எல்லையில் உள்ள தூணில், ஒருபுறம் பர்மிய மொழியிலும் (மியான்மரின் மொழி) மறுபுறத்திலும் ஹிந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் மியான்மாரின் எல்லை, கிராமத்தின் தலைவரின் வீடு வழியாக செல்கிறது. ஆகவே வீட்டின் அறைகளும் இரு நாடுகளிலும் உள்ளன. அதனால்தான், இந்த கிராமத்தின் தலைவர் இந்தியாவில் இரவு உணவு சாப்பிடுகிறார், மற்றொரு நாட்டில் உறங்கச் செல்கிறார் என விளையாட்டாகக் கூறப்படுகிறது. இந்த கிராம மக்களுக்கு இந்தியா மற்றும் மியான்மர் நாடுகளின் குடியுரிமை உள்ளது. அவர்கள் பாஸ்போர்ட்-விசா இல்லாமல் இரு நாடுகளுக்கும் பயணிக்க முடியும்.
இந்த உலகில் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல விஷயங்கள் உள்ளன. அந்தப் பட்டியலில் இந்த கிராமமும் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பது உண்மை அல்லவா!!