லக்னோ: உன்னாவ் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் சாலை விபத்து சம்பவத்தின் பின்னணியில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது நண்பர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இந்த சம்பவம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வேண்டும். மேலும் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். குல்தீப் சிங் செங்கருக்கு எதிராக கண்டனங்கள் தொடர்ந்து எழுந்து வருவதால், அதன் அழுத்தம் காரணமாக பாஜக இன்று எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கோரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுகுறித்து ஜீ நியூஸிடம் பேசிய உ.பி. பாஜக தலைவர் சுதந்திர தேவ் சிங், குல்தீப் சிங் செங்காருக்கு எதிராக கட்சி கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். குல்தீப் சிங் செங்கார் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். நாங்கள் அவரை இடைநீக்கம் செய்துள்ளோம், இப்போது குல்தீப் சிங் செங்கோருக்கு பாஜகவுடன் எந்த தொடர்பும் இல்லை. சட்டம் அதன் வேலையைச் செய்யும். இரு வழக்குகளையும் சிபிஐ விசாரிக்கும் என்றும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுதந்திர தேவ் சிங் கூறினார்.


இந்த விவகாரத்தில் எஸ்பி (SP), பகுஜன் சமாஜ் கட்சி (BSP) மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அரசியல் செய்கிறார்கள் என்று கூறினார். இது ஒரு சோகமான சம்பவம். இந்த சம்பவத்த்தால் பாஜக அரசு மிகவும் வேதனை அடைந்துள்ளது.  பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் உ.பி. அரசு நிற்கும், நிற்கிறது எனவும் கூறினார்.


லக்னோவில் இருக்கும் கே.ஜி.எம்.யு மருத்துவமனையில் விபத்தில் காயம் அடைந்த பாதிக்கப்பட்ட பெண் மற்றும் வழக்கறிஞர் ஆகிய இருவரும் வாழ்க்கைக்கும் இறப்புக்கும் இடையில் சண்டையிட்டுக் கொண்டிருகிறார்கள். இருவரும் வென்டிலேட்டரில் உள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உ.பி. அரசும் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.