உன்னாவ் பாலியல் குற்றவாளி குல்தீப் சிங் செங்கருக்கு என்னா தண்டனை? இன்று தீர்ப்பு
உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட குல்தீப் சிங் செங்கருக்கு இன்று தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க உள்ளது.
புதுடெல்லி: உன்னாவ் கற்பழிப்பு (Unnao rape case) மற்றும் கடத்தல் வழக்கில் குல்தீப் சிங் செங்கர் (Kuldeep Singh Sengar) குற்றவாளி என்று கடந்த 16 ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதாவது பாலியல் வல்லுறவு, விபத்து, கொலை முயற்சி உள்ளிட்ட 5 பிரிவுகளில் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்காருக்கு (Kuldeep Singh Sengar) தண்டனை வழங்கப்பட உள்ளது. இவருக்கு வழங்ககப்படும் தண்டனை வெள்ளிக்கிழமையான இன்று (டிசம்பர் 20) அறிவிக்கப்படலாம். தண்டனை குறித்த விவாதம் டெல்லியின் தீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடைபெறும். கடந்த விசாரணையில், குல்தீப் சிங் செங்கர் எந்த பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று சிபிஐ தெரிவித்தது. அதில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்ச ஆயுள் தண்டனையும் விதிக்கப்படலாம் எனக் கூறியிருந்தது. பாலியல் வழக்குகளில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதனால் சமூகத்திற்கு ஒரு வலுவான செய்தி சென்றடையும்.
அதே நேரத்தில், குல்தீப் சிங் செங்கரின் ஆலோசகர் இந்த பிரிவுகளில் குல்தீப் சிங் செங்கருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று வாதிட்டார். ஏனெனில் சிறையில் அவரது நடத்தை மிகவும் சிறப்பாக இருந்தது. இது மட்டுமல்லாமல், அவர் கடந்த 31 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் இருந்து வருகிறார். அவர் மீது ஒருபோதும் எந்த விதமான குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. பொது வாழ்க்கையில் கூட, குல்தீப் சிங் செங்கர் பல மேம்பாட்டுப் பணிகளைச் செய்து, தொடர்ந்து தனது பகுதியை வளர்ச்சி அடைய செய்துள்ளார் என குற்றவாளி தரப்பு வக்கீல் தனது வாதத்தை வைத்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் வழக்கறிஞரும் பாதிக்கப்பட்டவருக்கு நியாயமான இழப்பீடு கோரியிருந்தார். இதை குல்தீப் சிங் சாங்கரின் வழக்கறிஞர் எதிர்த்தார். இதன் பின்னர், இந்த வழக்கில் எவ்வளவு இழப்பீடு வழங்க முடியும் என்று இரு தரப்பினரின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு முடிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது. எனவே, பாதிக்கப்பட்டவரின் நிதி நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து பாதிக்கப்பட்ட வழக்கறிஞரிடமிருந்து தகவல் கோரப்பட்டது. அதே நேரத்தில், குல்தீப் சிங் சாங்கரின் நிதி நிலைமை குறித்து அவரின் வழக்கறிஞர் கேட்கப்பட்டு உள்ளது. இருவரும் இன்றைய (வெள்ளிக்கிழமை) விசாரணையில் நீதிமன்றத்தில் தெரிவிப்பார்கள்.
உன்னாவ் பாலியல் வழக்கில் நடந்தது என்ன..?
உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் அளித்து ஒரு வருடமாகியும் எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய இளம் பெண், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தன் தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு, இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்ணின் தந்தையை ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே மரணமடைந்துள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்பின்னர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து குல்தீப்சிங் சென்காரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டி வந்துள்னர். இதனால் பாதிக்கப்பட்டவரின் தாயும் பாதிக்கப்பட்ட பெண், எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறோம் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
இதன்பின்னர் ஜூலை மாதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது உறவினர் மற்றும் வழக்கறிஞர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பாலியல் வன்கொடுமை குறித்தும், தனக்கு நீதி வழங்கவேண்டும் என்றும் கூறி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தயார் சேர்ந்து ஒரு கடிதம் எழுதி உச்ச நீதிமன்றம் நீதிபதி உட்பட பல முக்கிய அமைப்புகளுக்கு அனுப்பு வைத்தார். இந்த கடிதத்தை அடுத்து உச்சநீமன்ற தலைமை சாலை விபத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.ஐ-க்கு உச்ச நீதிமன்றம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. அதே நேரத்தில், கீழ் நீதிமன்றம் 45 நாட்களில் பாலியல் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 16 ஆம் தேதி குல்தீப் சிங் செங்கர் (Kuldeep Singh Sengar) குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்தது. இன்றைய விசாரணையில் அவருக்கான தண்டனை விவரம் குறித்து நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.