புதுடெல்லி: சாலை விபத்து வழக்கில் விபத்துக்குள்ளான வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிக நீதிமன்றத்தை அமைக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு. மேலும் 15 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கார் மற்றும் அவருடன் சேர்ந்தவர்கள் என்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 வயது பெண் கடந்த 2017 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். ஆனால் புகார் அளித்து ஒரு வருடமாகியும் எந்தவித நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை எனக் குற்றம்சாட்டிய இளம் பெண், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத் வீட்டின் முன் பாதிக்கப்பட்ட பெண் தன் தற்கொலைக்கு முயன்றார். இதன் பிறகு, இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது. 


பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த பெண்ணின் தந்தையை ஆயுதம் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் பெண்ணின் தந்தை போலீஸ் கஸ்டடியில் இருந்த போதே மரணமடைந்துள்ளார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு பல தரப்புகளிலும் இருந்து கண்டனம் எழுந்தது. பா.ஜ.க எம்.எல்.ஏ-வை கைதுசெய்யக் கோரியும் பல இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.


இதன்பின்னர், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் குல்தீப்சிங் சென்காரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனாலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்ந்து குல்தீப்சிங் சென்காரின் சகோதரர் மற்றும் அவரது நண்பர்கள் மிரட்டி வந்துள்னர். இதனால் பாதிக்கப்பட்டவரின் தாயும் பாதிக்கப்பட்ட பெண், எங்களுக்கு நீதி வேண்டும். நாங்கள் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருகிறோம் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, முதன்மைச் செயலாளர் (உள்துறை), டிஜிபி, காவல் ஆய்வாளர், சிபிஐ தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் (உன்னாவ்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். 


இதன்பின்னர் ஜூலை மாதத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது உறவினர் மற்றும் வழக்கறிஞர் சென்ற கார் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சிறுமியின் உறவினர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறுமி மற்றும் அவரது வழக்கறிஞர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 


பாலியல் வன்கொடுமை குறித்தும், தனக்கு நீதி வழங்கவேண்டும் என்றும் கூறி, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது தயார் சேர்ந்து ஒரு கடிதம் எழுதி உச்ச நீதிமன்றம் நீதிபதி உட்பட பல முக்கிய அமைப்புகளுக்கு அனுப்பு வைத்தார். இந்த கடிதத்தை அடுத்து உச்சநீமன்ற தலைமை நீதிபதி, சாலை விபத்து தொடர்பான விசாரணையை 7 நாட்களில் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உ.பி. அரசுக்கு உத்தரவிட்டது. பாதிக்கப்பட்டவர்களையும் மற்றும் சாட்சிகளையும் பாதுகாக்கவும் உச்சநீதிமன்றமும் உத்தரவிட்டது.


இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் உன்னாவ் கற்பழிப்பு வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்தது. அப்பொழுது, உன்னாவ் கற்பழிப்பு வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையின் பேரில் எய்ம்ஸில் தற்காலிக நீதிமன்றத்தை அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் கீழ் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டது, இதன்மூலம் சாலை விபத்து வழக்கில் விபத்துக்குள்ளான வழக்கறிஞர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொள்ளலாம் எனக் கூறியது. 


சாலை விபத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் 15 நாட்கள் கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. அதே நேரத்தில், கீழ் நீதிமன்றம் 45 நாட்களில் பாலியல் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் உத்த்ரவிட்டது.