புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். அதனையடுத்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். 90 சதவீதம் உடல் எரிந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை ஏர்பஸில் இருந்து டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். மருத்துவமனை சார்பாக, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 6) இரவு 11:40 மணிக்கு, பாதிக்கப்பட்ட பெண் மூச்சுத் திணறல் ஏற்பட்டது என்று அறிக்கை வெளியிட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11:10 மணியளவில் ஹார்ட் அட்டாக் (Cardiac Arrest) ஏற்பட்டது. அதன்பிறகு மருத்துவர்கள் குழுக்கள் அவரை காப்பாற்ற மிகவும் போராடினார்கள். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாதிக்கப்பட்டவர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை மருத்துவரிடம் "நான் பிழைப்பேனா" என்று கேட்டிருந்தார். மேலும் ஒருவேளை நான் இறந்து விட்டால், குற்றவாளிகளை தப்பிக்க விட வேண்டாம் என்று அவர் தனது சகோதரரிடம் கூறினார். 


முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தலின் பேரில் பாதிக்கப்பட்டவர் விமான மூலம் டெல்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவரின் முழு உடலும் தீயினால் காயம் ஏற்பட்டிருந்ததால், ஆம்புலன்ஸ் வழியாக விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாக ஏஎஸ்பி டிராஃபிக் பூர்னேடு சிங் தெரிவித்தார். அவரைச் சுமக்க மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது. பிரேக்கிங் காரணமாக நோயாளிக்கு சிக்கல் ஏற்படாமல் இருக்க சீரான வேகத்தில் பயணம் இருந்தது. பெங்களூர், கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.


முன்னதாக நடந்தது என்ன..?


உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவில் உள்ள ஒரு கிராமத்திற்கு வெளியே வயல்வெளிக்கு சென்ற இளம் பெண்ணை 5 நபர்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த இளம்பெண் தற்போது உயிருக்கு போராடி வருகிறார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். 


பாதிக்கப்பட்ட அதே பெண் சில மாதங்களுக்கு முன்பு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானவர். இது குறித்து ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் அவர் புகார் அளித்துள்ளதாக போலீசார் கூறியிருந்தனர். மேலும் அவரை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தான் தீயிட்டு கொளுத்தியுள்ளனர் எனவும் அந்த 5 பேரில் 3 பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.


ஐதராபாத்தில் கால்நடைத்துறை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம், கோயம்புத்தூரில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நிர்பயா சம்பவம் என இது போன்று பல சம்பவங்கள் உள்ளன. ஆனால் இது போன்று பல கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகும், குற்றவாளிகள் சிந்தனை மேம்படவில்லை. இதை சரியான நேரத்தில் தடுக்காவிட்டால் அது சமூக சீர்கேடாக மாறும்.


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.