உத்தரப் பிரதேச மாநிலம் கோராக்பூர், பூல்பூர் ஆகிய மக்களவை தொகுதிகளின் கோரக்பூர் தொகுதி மற்றும் புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி 59,613 வாக்குகள் அதிகமாக பெற்று அமோக வெற்றி பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தர பிரதேசத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜகவுக்கு, இடைத்தேர்தலில் கிடைத்த தோல்வி பெருத்த ஏமாற்றத்தை அளித்தது.


இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத், இடைத்தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். யோகி ஆதித்யநாத் கூறியதாவது:-


இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இடைத்தேர்தலில் பாஜகவின் தோல்வி குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணியை குறைவாக மதிப்பிட்டதே தோல்விக்கு காரணம் என்றும் புல்பூர், கோரக்பூர் மக்களவை இடைத்தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 






புல்பூரில் பா.ஜ.க வேட்பாளரைவிட 59,613 வாக்குகள் அதிகமாக பெற்று சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் நாகேந்திர பிரதீப் சிங் வெற்றி பெற்றுள்ளது.


28வது சுற்று முடிவில், புல்பூர் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல் 47,351 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். 


சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம் கோவிந்த் சௌத்ரி, பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மாயாவதியை சந்தித்து பேசினார். உத்தரபிரதேச இடைத்தேர்தலில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


 


 



தொடர்ந்து நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெற்றுள்ளது.


கோரக்பூரில் 6வது சுற்று முடிவில், சமாஜ்வாடியின் வேட்பாளர் பிரவீன் குமார் 89,950 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.  பாரதீய ஜனதாவின் உபேந்திரா தத் சுக்லா 82,811 வாக்குகளுடன் அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.



இதேபோன்று பூல்பூரில் சமாஜ்வாடியின் வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் பட்டேல் 1 லட்சத்து 22 ஆயிரத்து 247 வாக்குகளை பெற்று 15 ஆயிரத்து 713 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.  பாரதீய ஜனதாவின் கவுசலேந்திரா சிங் பட்டேல் 1 லட்சத்து 6 ஆயிரத்து 534 வாக்குகளுடன் 2வது இடத்தில் உள்ளார்.


இரு மக்களைவை தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




இந்த இடைத்தேர்தலில் பாரதீய ஜனதா மற்றும் சமாஜ்வாடி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், கோரக்பூர், பூல்பூர் மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.  இதில், தபால் ஓட்டுகள் எண்ணிக்கையில் பாரதீய ஜனதா முன்னிலை பெற்றது.





உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் வாக்கு எண்ணும் பணி தற்போது தீவிரமாகநடைபெற்று வருகிறது.


உத்தர பிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற பின் அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்.  எனவே, கோராக்பூர் தொகுதியில் எம்.பி பதவி காலியானது, அதேபோல் கேசவ்பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்ற காரணத்தால் பஹல்பூர் நாடாளுமன்ற தொகுதி காலியானது.


இந்த இரண்டு தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஞாயிற்று கிழமை நடந்தது. இதில், கோரக்பூரில் 47.45 சதவீதமும், பூல்பூரில் 37.39 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. தற்போது இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி தீவிரமாக நடைபெற்றது.



இதற்காக கோராக்பூரில் 2141 வாக்குசாவடிகளும், பஹல்பூரில் 2059 வாக்குசாவடிகளும் வைக்கப்பட்டு, தேர்தல் நடைபெற்று இருக்கிறது. இதில் கோராக்பூரில் 47.45 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. பஹல்பூரில் 37.39 சதவிகிதம் வாக்குகள் பதிவானது.




தற்போது கோராக்பூரில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பாஜகவை சேர்ந்த உபேந்திரா தத் சுக்லா முன்னிலை வகிக்கிறார். பஹல்பூரிலும் பாஜக முன்னிலை வகிக்கிறது. கெளசலேந்திர பட்டேல் தற்போது முன்னிலை வகித்து வருகிறார்.


இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்து, இந்த கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் தொடர வாய்ப்பு இருக்கிறது. இந்த கூட்டணி வாக்குகளை எப்படி கவருகிறது என்பதை பொறுத்தே எதிர்கால கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். இதில், முக்கிய போட்டி பாஜகவுக்கும் சமாஜ்வாதி கட்சிக்கும் இடையில் மட்டுமே நடக்கிறது.


இதில் பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. சமாஜ் வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது.