`ரொம்ப அசிங்கமா போச்சு குமாரு` - துப்பாக்கியால் திணறிய போலீஸ் ; கலாய்க்கும் நெட்டிசன்கள்
காவல் நிலையத்தில் திடீரென ஐஜி ஆய்வு செய்த நிலையில், அங்கு இருந்த உதவி ஆய்வாளர் உள்பட யாருக்கும் துப்பாக்கியை கையாள தெரியவில்லை என்ற உண்மை புலப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் கோத்வாலி மாவட்டத்தில் உள்ள சண்ட் கபிர் நகரில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில், காவல் துறை ஐஜி ஆர்.கே. பரத்வாஜ் திடீரென ஆய்வு செய்தார். அப்போது,கலிலாபாத் காவல் நிலையத்தில், சென்ற அவர், ரைஃபிள் துப்பாக்கியை லோட் செய்யுமாறு அந்த காவல் நிலையத்தின் உதவி காவல் ஆய்வாளரிடம் ஐஜி கூரியுள்ளார். ஆனால், அந்த உதவி ஆய்வாளர் துப்பாக்கி லோட் செய்ய தெரியாமல் திணறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, துப்பாக்கியின் குண்டை, குழாய் வழியாக வைத்து லோட் செய்ய வேண்டும் என அந்த உதவி ஆய்வாளர் கூறியது பலரையும் ஆச்சரியமடைய செய்தது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அந்த காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மட்டுமின்றி, அங்கிருந்த எந்த காவலருக்கும் துப்பாக்கியைக் கொண்டு சுட தெரியவில்லை என பின்னர் தெரியவந்தது.
மேலும் படிக்க | பாரத் பயோடெக்கின் நாசிவழி தடுப்பூசி iNCOVACC விலை நிர்ணயம்!
ரைஃபிள் துப்பாக்கி மட்டுமின்றி, கண்ணீர் புகைக்குண்டு துப்பாக்கியும் ஒரு பாதுகாப்பு அதிகாரிக்கு இயக்க தெரியவில்லை. பல முறை முயன்றும் அவரால் அதை சரியாக செய்யமுடியவில்லை. இந்த சிக்கல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அவசரகால சூழ்நிலைகளுக்கு பயிற்சி மற்றும் பயிற்சியின் முக்கியத்துவத்தை ஐஜி பரத்வாஜ் வலியுறுத்தினார். எந்தவொரு எதிர்பாராத சம்பவத்திற்கும் தயாராக இருக்கும் வகையில் பயிற்சியைத் தொடருமாறு காவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
கோட்வாலி கலிலாபாத் ஸ்டேஷனில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் தயார்நிலை மற்றும் திறமை தொடர்பான சில சிக்கல்கள் ஆய்வில் தெரியவந்தது. சட்ட அமலாக்க அதிகாரிகள் தங்கள் சமூகங்களுக்கு திறம்பட சேவை செய்வதற்கும் பாதுகாப்பதற்கும் முறையாக பயிற்சி பெற்று தயாராக இருப்பது முக்கியம். வீடியோ வைரலானதை தொடர்ந்து, பலரும் அந்த காவலர்களை இணையத்தில் பகடி செய்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ