இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை பிஆர்டி கல்லூரி மருத்துவமனையில் 1,256 பேர் இறந்துள்ளதாக, பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரி முதல்வர் பி.கே. சிங் புதன்கிழமை அன்று கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரியில் ஆகஸ்ட் 31 (வியாழக்கிழமை) அன்று 16 குழந்தைகள் இறந்துள்ளது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 415 குழந்தைகள் மாநில அரசால் இயக்கப்படும் மருத்துவமனையில் இறந்துள்ளனர். இந்த செய்தி மிகவும் அதிர்ச்சி அடைய வைக்கிறது.


இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை பிஆர்டி கல்லூரி மருத்துவமனையில் 1,256 பேர் இறந்துள்ளனர். அதாவது ஜனவரி மாதம் 152, பிப்ரவரி 122, மார்ச் 159, ஏப்ரல் 123, மே 139, ஜூன் 137 மற்றும் ஜூலை 128 என்ற எண்ணிக்கையில் பிஆர்டி கல்லூரி மருத்துவமனையில் இறந்துள்ளனர். 


முன்னதாக கடந்த மாதம் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இதே மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்தனர். இதனால் பி.ஆர்.டி. மருத்துவ கல்லூரியின் முதல்வர் ராஜிவ் மிஸ்ரா மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். தற்போது அவர்களை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.