யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு புதன்கிழமை (மார்ச் 25, 2020) மாநிலம் முழுவதும் பான் மசாலா உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனைக்கு மொத்த தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது. .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் உமிழ்நீரில் சுறுசுறுப்பாக இருப்பது கண்டறியப்பட்டதால், மக்கள் அதை வெளியே துப்ப முனைவதை தடுக்கும் விதமாக பான் மசாலா மற்றும் குட்கா மீதான தடையை மாநில அரசு கொண்டுவந்துள்ளது என்று கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி முன்பு கூறியிருந்தார்.


முன்னதாக மார்ச் 2017-ல் அவர் முதல்வராக பதவியேற்றபோது, ​​யோகி ஆதித்யநாத் அனைத்து மாநில அரசு அலுவலகங்களிலும் குட்கா, பான் மசாலாவை தடை செய்திருந்தார் என்பது நினைவிருக்கலாம். அதன் போது மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களுக்குள்ளும் குட்கா, பான் மசாலா மற்றும் மெல்லும் புகையிலை ஆகியவற்றை உடனடியாக தடை செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.


இருப்பினும், ஆரம்ப கண்டிப்புக்குப் பிறகு, அரசு ஊழியர்கள் புகையிலை மற்றும் பான் மசாலாவை மெல்ல பயன்படுத்த தொடங்கினர். எவ்வாறாயினும், இந்த முறை COVID-19 வெடிப்பைக் கருத்தில் கொண்டு பான் மசாள உற்பத்தியினை தடைசெய்வதில் தீவிரமாக உள்ளது.


முன்னதாக பிரதமர் மோடி அவர்கள், நாட்டில் கொரோனா வைரஸ் வெடிப்பு அதிகரிதுத வரும் நிலையில், ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக மக்களை சந்தித்து நாடு தழுவிய முழு அடைப்பினை அறிவித்தார். மேலும் இந்த நோயைக் கையாள்வதற்கான ஒரே வழி "சமூக விலகல்" என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


கடந்த வாரம் தேச மக்களுடன் உரையாற்றிய பிரதமர், ஒவ்வொரு வீட்டிலும் அடைப்பு ஒரு "லட்சுமன் ரேகாவை" ஈர்த்துள்ளது என்றும் மக்கள் தங்கள் சொந்த பாதுகாப்புக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் வீட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.