உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 22-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 29-ம் தேதி என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.


உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.