லக்னோ: உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப்பிரதேசம் முதல்வரும் சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவும் இன்று ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். 


உத்தரப்பிரதேசம் சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு பிப்ரவரி 11-ம் தேதி துவங்கி 7 கட்டங்களாக நடக்க உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் - சமாஜ்வாடி கூட்டணி உருவாகி உள்ளதால் இன்று நடக்கும் பிரசார கூட்டத்தில் முதல் முறையாக ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர். 


காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, தேர்தலை எதிர்கொள்வதால் நிச்சயம் தங்கள் கட்சி 300 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என அகிலேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராகுல், அகிலேஷ் பங்கேற்கும் இந்த பிரசார கூட்டத்தில் பிரியங்காவும், கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.