உ.பி கனமழை: இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு....!
வட மாநிலங்களை மிரட்டும் கனமழை. தற்போது வரை இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு.
வட மாநிலங்களை மிரட்டும் கனமழை. தற்போது வரை இறப்பு எண்ணிக்கை 44 ஆக உயர்வு.
வரலாறு காணாத அளவுக்கு வாடா மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் கங்கை ஆற்றில் அபாயக்கட்டத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கங்கை நதியில் நீர் மட்டம் தற்போது கிடு கிடு என உயர்ந்து வருகிறது. 114.61 CM-ல் இருந்து 114 வரை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த வெள்ளத்தால் கங்கை நதிக்கரையை சுற்றியுள்ள சுமார் 35 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால், கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், கான்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் கரையோரத்தில் இருக்கும் 35-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து, இதுவரையில் கனமழைக்கு சுமார் 44 பேர் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.