லக்னோ: உ.பி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இந்து சமாஜ் கட்சி தலைவர் கமலேஷ் திவாரியின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி கொடுக்கப்படும் என உத்தரபிரதேச அரசு அறிவித்துள்ளது. கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி இந்து சமாஜ் கட்சித் தலைவர் கமலேஷ் திவாரி, லக்னோவில் உள்ள அவரது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டார். 15 முறை குத்தப்பட்டும், முகத்தில் சுட்டும் கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அவரது கழுத்தில் இரண்டு ஆழமான குத்து காயங்கள் காணப்பட்டன. கமலேஷ் திவாரியின் மண்டை ஓட்டின் பின்புறத்தில் ஒரு புல்லட் (துப்பாக்கி குண்டு) இருந்தது என கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், இன்று உ.பி. அரசு அறிவிப்பு, கொலை செய்யப்பட்ட கம்லேஷ் திவாரியின் குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கப்படும் என கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அக்டோபர் 18 ஆம் தேதி, லக்னோவின் குர்ஷெத் பாக்கில் உள்ள கமலேஷ் திவாரியின் வீட்டுக்கு இரண்டு சென்று, அவரிடம் தீபாவளி பண்டிகையொட்டி இனிப்பு கொடுக்க வந்தாக கூறியுள்ளனர். அந்த இரண்டு பேரையும் வீட்டிற்குள் வருமாறு அழைத்துள்ளார். அப்பொழுது அந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.


இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்த போலீசார், அஷ்பக் உசேன் (34), மொயுதீன் பதான் (27) ஆகிய இரு முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்தனர். கடந்த காலங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக கமலேஷ் திவாரி கூறிய அறிக்கைகளுக்கு பழிவாங்குவதற்காக, அவரை கொன்றதாகக் கூறப்படுகிறது. 


குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டத்தை சேர்ந்த இருவரையும் குஜராத் - ராஜஸ்தான் எல்லையில் குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் கைது செய்தனர். இந்து சமாஜ் கட்சி தலைவர் கம்லேஷ் திவாரிக்கு கொடுப்பதாகக் கூறிய இனிப்புப் பெட்டியில் சூரத் முகவரி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்அடிப்படையில் தான் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.


உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமலேஷ் திவாரியின் குடும்ப உறுப்பினர்களை லக்னோவில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திது ஆறுதல் கூறினார். திவாரி மனைவி கிரண் திவாரி, உத்தரபிரதேச முதல்வர் குடும்பத்தினருக்கு நீதி வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் திவாரி கொலையில் தொடர்புடையவர்கள் தப்பிக்க முடியாது என்று யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.