உத்தரபிரதேச மகாராஜ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநில மகாராஜ்கஞ்ச் பகுதியில் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. திங்களன்று, சீனாவிலிருந்து திரும்பும் அந்த மருத்துவ மாணவரின் ரத்தம் சோதனைக்காக மாவட்ட மருத்துவமனை மகாராஜ்கஞ்சில் சேகரிக்கப்பட்டன.


புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்தில் அந்த மாணவனின் ரத்தம் பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன, இது ரிப்போர்ட் பெற்ற பிறகு நோயாளியின் மேலதிக சிகிச்சை முடிவு செய்யப்படும்.


சீனாவில் அந்த மாணவன் லேசான இருமலால் பாதிக்கப்பட்டுள்ளதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவர் திரும்பிய தகவல் கிடைத்ததும், சனிக்கிழமை இரவு சுகாதாரத் துறையால் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சீனாவின் ஹூபே பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ் மாணவர் ஆவார். 


இதற்கிடையில் சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகான் நகரில் வசித்து வரும் மக்களை கடந்த மாத இறுதியில் கொரோனா எனப்படும் கொடிய வைரஸ் தாக்கியது. இந்த வைரசால் புதுவித நிமோனியா நோய்க்கு ஆட்பட்ட அவர்கள் அடுத்தடுத்து ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் இந்த நோய் தீவிரமடைந்து உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த வைரஸ் சீனாவின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கப்படவில்லை. தலைநகர் பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஹுபெய்யை சுற்றியுள்ள மாகாணங்களிலும் பெருத்த சேதங்களை கொரோனா வைரஸ் ஏற்படுத்தி வருகிறது.


இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுவரை இந்த நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் 2,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 461 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், மேலும் 1300 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.