#UPCivicPollsResults: மதுராவில் லக்கி டிராவால் வெற்றி பெற்ற பாஜ., வேட்பாளர் மீரா அகர்வால்
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த 22-ம் தேதி, 24-ம் தேதி மற்றும் 29-ம் தேதி என 3 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பிஜேபி வெற்றி பெற்றதை அடுத்து, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அவர் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் என்பதால், அரசியல் தலைவர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
உ.பி., உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மதுராவில் வார்டு எண் 56-ல் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் இருவரும் 874 வாக்குகளைப் பெற்று சமநிலையில் இருந்ததால், லக்கி டிரா மூலம் பாஜக வேட்பாளர் மீரா அகர்வால் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கபப்ட்டுள்ளது.
மதுராவில் வார்டு எண் 56-ல் பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் இருவரும் 874 வாக்குகளைப் பெற்று சமநிலையில் உள்ளனர். எனவே லக்கி டிரா மூலம் வெற்றி பெற்றவர் பெயர் அறிவிக்கப்படும்.