ஜம்மு காஷ்மீரில் அடிப்படை ஜனநாயகத்தை கொண்டு வருமா பஞ்சாயத்து தேர்தல்?
NC Chief Farooq Abdullah On Panchayat Election: தேர்தல்களில் எப்போதும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்போம், ஆனால் தேர்தலுக்காக அவர்களிடம் பிச்சை எடுக்க மாட்டோம்! ஏன் இப்படி கூறுகிறார் ஃபாரூக் அப்துல்லா?
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடைபெற உள்ள பஞ்சாயத்து தேர்தல் அடிப்படை ஜனநாயகத்தை கொண்டு வரும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா நம்பிக்கை தெரிவித்தார். "குறைந்த பட்சம் ஏதாவது செய்யப்படுவது நல்லது, பஞ்சாயத்து தேர்தல்கள் நடத்தப்பட்டு, தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள், அது அடிப்படை ஜனநாயகத்தை கொண்டு வரும்" என்று அப்துல்லா நம்பிக்கை வெளியிட்டார்.
நேற்று (2023, மே 1, திங்கட்கிழமை) செய்தியாளர் சந்திப்பில் மத்திய அரசை கடுமையாக சாடிய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஒவ்வொரு தேர்தலிலும் அவர்களுக்கு எதிராக போராடுவேன் என்று கூறினார்.
"ஒவ்வொரு தேர்தலிலும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்த்துப் போராடுவோம், ஆனால் அவர்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் பிச்சை எடுக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.
பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளித்த NC தலைவர், யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதம் அதிகரிப்பதற்கு 370வது விதியே காரணம் என்று கூறினார்.
மேலும் படிக்க | ச்சே... ஏன் இந்த வேலையை செஞ்சேன்? உலகத்துக்கே ஆபத்து! எச்சரிக்கும் AI காட்பாதர்
ஜம்மு காஷ்மீரை விட்டு தீவிரவாதம் வெளியேறிவிட்டதா? என்று மத்திய அரசை கேள்வி கேட்ட ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர்தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா, 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதன் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்றார்கள். 370வது சட்டப்பிரிவு தீவிரவாதத்தின் பின்னணியில் உள்ளது. சமீபத்தில் தீவிரவாத தாக்குதலில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். `அவர்களுக்கு குடும்பம் இல்லையா? குண்டு துளைக்காத வாகனத்தில் அனுப்பப்பட்டார்கள். ஆனால் என்ன நடந்தது? என்று கேள்வி எழுப்பினார்.
ஏப்ரல் மாதம் ஈதுல் பித்ர்.சமயத்தில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட பூஞ்ச் பயங்கரவாத தாக்குதலில், "அப்பாவிகளை" கைது செய்யக் கூடாது என்று அப்துல்லா வலியுறுத்தினார்.
"இப்போது பூஞ்ச் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள நிலையில், அப்பாவிகள் கைது செய்யப்படக் கூடாது என்பதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகின்றனர். இது தவறான முறை" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார். அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார்.
ஏப்ரல் 20 அன்று, ரஜோரி செக்டாரில் பிம்பர் காலி மற்றும் பூஞ்ச் வழியாகச் சென்ற ராணுவ வாகனம் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் மூலம் நடத்திய தக்குதலில், ராணுவத்தின் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் படிக்க | கர்நாடக தேர்தலில் அரியணை யாருக்கு... Zee News MATRIZE வெளியிட்டுள்ள கருத்து கணிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ