நாடு முழுவதும் 72 மையங்களில் இன்று சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு தொடங்கியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்பட 26 பணிகளை உள்ளடக்கிய சிவில் சர்வீசஸ் தேர்வுகளை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.


இந்த ஆண்டுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வு இன்று தொடங்கியது.  இந்தியா முழுவதும் 72 நகரங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது.


காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையில் முதல் தாளும், பிற்பகல் 2.30 மணி முதல் 4.30 மணி வரையில் 2-ம் தாளும் என முதல்நிலை தேர்வு நடக்கிறது.