UPSC-ன் CMS எழுத்து தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது!
UPSC-ஆல் கடந்த ஜூலை 22-ஆம் நாள் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது!
UPSC-ஆல் கடந்த ஜூலை 22-ஆம் நாள் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது!
தேர்வின் முடிவுகளை http://www.upsc.gov.in/sites/default/files/WR-CMSE-2018-Engl.pdf என்ற இணைப்பில் வெளியிட்டுள்ள UPSC, இத்தேர்வில் வெற்றிப் பெற்றவர்கள் விரைவில் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளது.
கிட்டத்தட்ட 454 காலிப்பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடங்கள் குறித்த விவரங்கள்:
Assistant Divisional Medical Officer in the Railways: 300 post,
Assistant Medical Officer in Indian Ordnance Factories Health Services: 16 posts,
Junior Scale Posts in Central Health Services: 138 posts
தேர்ச்சி பெற்றுள்ள வேட்பாளர்கள் நேர்முக தேர்வின்போது அசல் சான்றிதழ்களை சமர்பித்தல் அவசியம் ஆகும். நேர்முக தேர்வின்போது வேட்பாளர்கள் கல்வி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்களை காண்பித்தல் அவசியம் ஆகும்.