டெல்லியில் கடந்த 41வது நாளாக போராடி வரும் தமிழக விவசாயிகளுடன் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துள்ளார். விவசாயிகளிடம் கோரிக்கை மனுவை முதல்வர் பழனிச்சாமி பெற்றார். நதிகள் இணைப்பு குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விவசாய கடன் தள்ளுபடி குறித்து மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார். விவசாயிகள் போராட்டத்தை கைவிடவும் முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார். வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க பிரதமரை வலியுறுத்தினேன். 


மேலும் தமிழகத்தில் உள்ள ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார். அய்யாக்கண்ணு வைத்த கோரிக்கை குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார். 


தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது என அய்யாக்கண்ணு கூறியுள்ளார். தேசிய வங்கியில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மழை பொய்த்துவிட்டதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கவும் அய்யாக்கண்ணு வலியுறுத்தியுள்ளார்.


விவசாயிகள் பிரச்சனை குறித்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் பேட்டியளித்துள்ளார். விவசாயிகளின் கோரிக்கை குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. முதல்வர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிடவும் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார்.