காஷ்மீரில் நாங்கள்தான் வன்முறையை தூண்டிவிட்டோம் என்று லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடைபெற்ற ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதியே என்று பயங்கரவாதி ஹபீஸ் சயீத் கூறி உள்ளதாக இந்தியா டுடே செய்திவெளியிட்டு உள்ளது.


லட்சக்கணக்கான காஷ்மீரிகள் சாலைக்கு வந்து பேரணியாக சென்றதை நீங்கள் பார்த்தீர்களா? கூட்டத்தினரால் தோளில் தூக்கிவரப்பட்டனவரை பார்த்தீர்களா? ஊர்வலத்திற்கு தலைமை தாங்கியது யார் என்று உங்களுக்கு தெரியுமா? அவர் லஷ்கர்-இ-தொய்பாவின் "அமீர்" என்று ஹபீஸ் சயீத் கூறியுள்ளான்.


பாகிஸ்தானில் உள்ள பைசாலாபாத்தை சேர்ந்த பலர் காஷ்மீருக்குல் ஊடுருவி வன்முறையில் ஈடுப்பட்டு பலர் தங்களுடைய உயிரை தியாகம் செய்து உள்ளனர் என்றும், காஷ்மீர் என்றாவது ஒருநாள், பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதை குறிப்பிட்டு பேசிஉள்ள ஹபீஸ் சயீத், “ஒருநாள் இந்தியா பிரிவதை உலகம் பார்க்கும்,” என்று கூறினான்.