இந்தியா வந்த US வெளியுறவுத்துறை அமைச்சர் பாம்பியோ மோடியை சந்திப்பு!!
அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை!
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தார். நேற்று இந்தியா வந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், இருநாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்தும், வரி விதிப்பு பிரச்சனை, எச்1 விசா, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை!
நேற்று இரவு டெல்லி வந்த பாம்பியோவுக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை இன்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
பரஸ்பர வர்த்தக உறவுகள், ஏற்றுமதி இறக்குமதி வரிவிதிப்பு தொடர்பான இந்தியா-அமெரிக்கா இடையிலான மோதல்கள், தீவிரவாதம், ஈரானில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் விவகாரம், எச்-1 பி விசா மற்றும் எச்-4 விசா தொடர்பான பிரச்சினைகள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ரக ஏவுகணையை இந்தியா வாங்க, அமெரிக்கா ஆட்சேபம் தெரிவித்து வருவதால் இதுகுறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் வற்புறுத்தலுக்காக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கும் முடிவை கைவிடப்போவதில்லை என்று அமெரிக்காவுக்கு இந்தியா திட்டவட்டமாக தெரிவிக்க கூடும்.
பிரதமர் மோடி ஜி 20 மாநாட்டில் பங்கேற்பதற்கு முன்னோட்டமாக மைக் பாம்பியோவின் வருகை அமைந்துள்ளது. இந்தியா அமெரிக்க நட்புறவை மேம்படுத்தக் கூடிய வகையில் பாம்பியோவின் இந்திய பயணம் அமையும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ பசிபிக் பிரதேசத்தில் சுதந்திரமான வர்த்தகத்திற்கு முயற்சிகள் எடுதது வரும் அதிபர் டிரம்பின் நிர்வாக ரீதியான முடிவுகளில் முக்கியமான கூட்டாளியாக இந்தியா இருந்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.