உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தல்: ஏழாம் கட்ட வாக்குப்பதிவு இன்று!
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், 7வது மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், ஏழாவது கட்ட வாக்குப் பதிவு இன்று, மார்ச் 7ஆம் தேதி நடைபெறுகிறது. மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கிய நிலையில், பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். மாநிலத்தில் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி இடயே முக்கிய போட்டி நிலவுகிறது.
உத்திரபிரதேசத்தில் உள்ள அஸம்கர், மௌ, ஜான்பூர், காஜிபூர், சந்தோலி, வாரணாசி, மிர்சாபூர், பதோஹி மற்றும் சோன்பத்ரா உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மொத்தம் உள்ள 54 சட்டமன்றத் தொகுதிகளில் ஏழாவது மற்றும் கடைசி கட்டமாக மார்ச் 7ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தின் ஏழாவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தலையொட்டி மத்திய மாநில பொது நிறுவனங்கள் மற்றும் பிற பணியாளர்கள் அனைவரும் இன்று, மார்ச் 7ஆம் தேதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR