2019-ஆம் ஆண்டு அலகாபாத் கும்ப மேளா வரவுள்ளதை அடுத்து, இந்நிகழ்ச்சிக்கு வரவோருக்கு ஏதுவாக 1 லட்சத்திற்கும் மேலான கழிவறைகள் கட்டி தரப்படும் என முதல்வர் யோகி அதித்யநாத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடுத்தாண்டு உத்திரபிரதேசத்தில் நடைபெறவுள்ள அலாகபாத் கும்ப மேளா வேலைகள் மும்மரமாக நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரும் நவம்பவர் 30-ஆம் நாளுக்குள் கும்ப மேளாவிற்கான வேலைகள் முடிவடையும் என தெரிவித்தார்.


தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்பவருக்கான சுகாரதம் குறித்து பேசிய அவர்., தூய்மை இந்தியா திட்டத்தினை கருத்தில் கொண்டு வரும் கும்பமேளாவிற்கு வரும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 1,22,000 கழிவறைகள் கட்டி தரப்படும் என தெரிவித்துள்ளார்.


முன்னதாக உத்தரபிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற அலகாபாத் நகரின் பெயரினை  பிரயாக்ராஜ் என மாற்றுவதற்கு மாநில அரசு திட்டமிட்டுள்ளாக தெரிவித்துள்ளது. 


பிராயகை என்பது புரணாங்களில் குறிப்பிடப்படும் பிரசிதிப்பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும். அலகாபாத்தை பிராயகை என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்துவந்த நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள கும்பமேளாவின் போது பெயரை மாற்ற மாநில அரசால் முடிவுசெய்யப்பட்டது. 


இதனையடுத்து ஆளுநரிடன் ஒப்புதல் கோரி கோரிக்கை வைக்கப்பட்டுத, இந்த கோரிக்கையினை ஏற்ற ஆளுநர் ராம் நாயக்கும் ஒப்புதல் அளித்துள்ளார். எனவே விரைவில் அலகாபாத் பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.