Uttar Pradesh Lok Sabha Election Result: தலைகீழான கருத்துக்கணிப்பு... சைலண்ட் கில்லரான சமாஜ்வாதி கட்சி
UP Lok Sabha Election Result 2024:மக்களவை தேர்தல் முழுவதிலும் சமாஜ்வாதி கட்சி மிக அமைதியாக தன் காய்களை நகர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை அக்கட்சி கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் காங்கிரஸ் கட்சி மேல்தான் இருந்தது.
UP Lok Sabha Election Result 2024: 2024 மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், பல மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு முற்றிலும் மாறுபட்ட முடிவுகளை காண முடிகின்றது. இதில் மிக முக்கியமான மாநிலம் உத்தர பிரதேசம். பாஜக மிக எளிதாக வெற்றிக்கனியை பறிக்கும் என கணிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்றாக இருந்தது. எனினும், தற்போதைய நிலவரப்படி, நிலைமை தலைகீழாக உள்ளது.
2014 ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தல் களத்தில் அசைக்க முடியாத நிலையில் இருந்த பாஜக இப்போது பெரிய பின்னடைவைக் கண்டுள்ளது. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கு 80 எம்.பி.க்களை அனுப்பும், அரசியல் ரீதியாக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தில், எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கு,ம் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் பாஜக-வுக்கு தீவிரமான ஒரு நெருக்கடியை அளித்து வருகிறது.
பாஜக தவறவிட்டது எங்கே?
தொடர்ந்து பெற்ற வெற்றிகளால் உத்தர பிரதேசத்தை பாஜக மிக லேசாக எடுத்துக்கொண்டாதாகத் தெரிகிறது. சில வேட்பாளர்களின் பிரச்சாரத்தில் எதிர்கட்சிகளை பற்றி குறைகூறும் பேச்சுகளே அதிகம் இருந்ததாகவும் கருதப்படுகின்றது. அதே வேளையில் சில முக்கிய தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளரை கூட அறிமுகம் செய்ய நீண்ட காலம் எடுத்துக்கொண்டது. இது தங்களது தேர்தல் வியூகம் என அக்கட்சி தெரிவித்தது. ஆனால், இது அவர்களது அச்சம் என பாஜக கிண்டல் செய்தது. தற்போது வந்துகொண்டு இருக்கும் முடிவுகளை பார்த்தால், காங்கிரஸ் கூட்டணியின் அரசியல் வியூகம் வென்றிருக்கிறதோ என்றே தோன்றுகிறது.
சைலண்டாக வேலை செய்த அகிலேஷ்
மறுபுறம் மக்களவை தேர்தல் முழுவதிலும் சமாஜ்வாதி கட்சி மிக அமைதியாக தன் காய்களை நகர்த்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில், இந்தியா கூட்டணியில் அதிக இடங்களை அக்கட்சி கொண்டிருந்தாலும், அனைவரின் பார்வையும் காங்கிரஸ் கட்சி மேல்தான் இருந்தது. பொதுப் பார்வைக்கு உத்தர பிரதேச தேர்தல்கள் அமேதியில் தொடங்கி ராய்பரேலியில் முடிந்தன. இவற்றின் மீதான சர்ச்சை மிக அதிகமாக இருந்தது எஸ்பி -க்கு உதவியது. அக்கட்சி தாங்கள் ஏற்கனவே வலுப்பெற்றிருந்த தொகுதிகளை மேலும் வலுவூட்டியதோடு, கடந்த மக்களவைத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் புத்திசாலித்தனமான பிரச்சாரத்தை மெற்கொண்டது.
ராகுல் காந்தியை மனம் மாறச்செய்த அகிலேஷ்
ராகுல் காந்தி அமேதி மற்றும் ராய்பரேலியில் போட்டியிட மிகவும் தயங்கிய நிலையில், அவர் மனதை மாற்றி ராய்பரேலியில் அவரை போட்டியிட வைத்ததில் அகிலேஷ் யாதவுக்கு அதிக பங்குள்ளது என கூறப்படுகின்றது. அமெதியிலேயே ராகுல் காந்தி களம் இறங்க வேண்டும் என அகிலேஷ் விரும்பியதாகவும், ஆனால், ராகுல் ராய் பரேலியை தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகின்றது.
மதியம் 3:30 மணி நிலவரப்படி, சமாஜ்வாதி கட்சி 36 இடங்களிலும், பாஜக 33 இடங்களிலும், காங்கிரஸ் 7 இடங்களிலும், ஆர்எல்டி 2 இடங்களிலும் முன்னிலை வகித்தன. எஸ்பி மற்றும் காங்கிரஸ் ஆகியவை இந்தியா கூட்டணியில் உள்ளன. பாஜக மற்றும் ஜெயந்த் சவுத்ரியின் RLD ஆகியவை தேர்தலுக்கு முன் கூட்டணியில் இணைந்தன. 2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தல் முடிவுகளுக்கு இன்றைய போக்குகள் முற்றிலும் மாறுபட்டு இருந்தன.
சமீபத்திய நிலவரப்படி காங்கிரஸ் ஏழு இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதில் அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய காங்கிரஸ் குடும்ப கோட்டைகள் அடங்கும். அமேதியில் கிஷோரி லால் சர்மா பாஜக -வின் ஸ்மிருதி இரானியை பின்னுக்குத் தள்ளி முன்னிலையில் உள்ளார். ஸ்மிருதி இரானியின் பின்னடைவும் பேசுபொருளாகியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ