டேராடூன்: உத்தரகாண்டில் இருந்து நெஞ்சை பதபதைக்க வைக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. சாமோலி மாவட்டத்தில் உள்ள கழிவுநீர் ஆலையில் புதன்கிழமை மின்சாரம் தாக்கியதில் 15 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் நான்கு ஊர்க்காவல் படையினரும் அடங்குவர். இதில் 5 தொழிலாளர்கள் உடல் கருகிய நிலையில், இருவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமாமி கங்கை திட்டத்தின் கீழ் இந்த கழிவுநீர் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. பலத்த தீக்காயமடைந்த தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் நிர்வாகக் குழுவினர் மீட்புப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.


டிரான்ஸ்ஃபார்மர் அதாவது மின்மாற்றி வெடித்ததால், கழிவுநீர் ஆலையில் மின்னோட்டம் பரவியதாக கூறப்படுகிறது. அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் அதன் பிடியில் சிக்கினர். சாமோலி விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக காவல்துறை மற்றும் நிர்வாக குழுவினர் பலத்த தீக்காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் பலர் தீக்காயம் அடைந்துள்ளதாக சாமோலியின் எஸ்பி பிரமேந்திர தோவல் தெரிவித்தார். அலக்நந்தா ஆற்றின் கரையோரத்தில் உள்ள டிரான்ஸ்ஃபார்மரில் வெடிவிபத்து ஏற்பட்டது, அதன்பிறகு மின்னோட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. 



மேலும் படிக்க | இந்தியாவின் பணக்கார எம்எல்ஏ டி கே சிவகுமார்! ஏழை பாஜக எம்எல்ஏவின் சொத்து ₹1,700 மட்டுமே


அவுட்போஸ்ட் பொறுப்பாளரும் இறந்தார்


இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாக ஏடிஜிபி முருகேசன் தெரிவித்துள்ளார். இதில் ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஐந்து ஊர்க்காவல் படையினரும் அடங்குவர். முழு விவகாரமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. முதல்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் மின்சாரம் பாய்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இந்த விபத்து நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இது குறித்த விசாரணை நடந்து வருகிறது. உத்தரகாண்ட் டிஜிபி அசோக் குமார் இந்த விபத்தில் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நியமிக்கப்பட்ட ஒரு அவுட் போஸ்ட் பொறுப்பாளரும் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.


எனர்ஜி கார்ப்பரேஷன் மீது அலட்சியமாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது


இந்த விபத்தையடுத்து அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. எரிசக்தி கழகம் அலட்சியமாக இருந்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். விபத்து குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி, நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விபத்தையடுத்து இத்திட்டத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தையடுத்து அப்பகுதி முழுவதும் பரபரப்பான சூழல் நிலவுகிறது. நமாமி கங்கை திட்டத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இந்த விபத்து நடந்த போது, ​​அங்கு 24 பேர் இருந்ததாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | பாஜவுக்கு எதிராக திட்டம் தீட்டிய சோனியா, ராகுல் சென்ற விமானம் எமர்ஜென்சி லாண்டிங்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ